கேரள மாநிலத்தில் வினியோகிக்க கொண்டு வரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டு களில் பா.ஜனதாவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டு இருப்பதாக மக்களவை யில் நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன் பிரச்சினை எழுப்பினார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற் கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப் பட்டது.
அது நமது தேசிய மலர். அது போல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments