உலகின் மிகப்பெரிய யானையின் பற்பசை !

0
'யானை யெல்லாம் பல் துலக்குதா?' என்று வேடிக்கை யாகச் சொல்லி யிருப்போம். யானைக்குப் பல் இருக்கா? எத்தனை பல் இருக்கு தெரியுமா? தெரியலைன்னா, இந்தப் பக்கத்தில தேடிச் தெரிஞ்சுக்கோங்க!
யானை பற்பசை - Elephant's toothpaste
யானை பல் துலக்குவது இல்லை என்றாலும், 'யானை பற்பசை' என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா? 'ஹைட்ரஜன் பெராக்சைட்' (Hydrogen Peroxide) என்று ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. 

இது வேதி வினையால் மாற்றம் அடையும் போது வெளிப்படும் பசை போன்ற நுரை தான் யானை பற்பசை (Elephant Toothpaste). நாமே 'யானை பற்பசை' பரிசோதனை செய்வோம்…

என்னென்ன தேவை?

1. 'ஹைட்ரஜன் பெராக்சைட்' திரவம் - அரை கப்

2. சுத்தமான பிளாஸ்டிக் பாட்டில் - 1

3. உலர்ந்த ஈஸ்ட் - 1 ஸ்பூன்

4. வெதுவெதுப்பான தண்ணீர் - 3 ஸ்பூன்

5. பாத்திரம் துலக்கப் பயன்படும் சோப்புத் திரவம்

6. சிறிய கோப்பை (கப்)

7. உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணம்

8. புனல் (Funnel)

9. கையுறை

10. பாதுகாப்புக் கண்ணாடி

1. முதலில் ஹைட்ரஜன் பெராக்சைடை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் ஊற்ற வேண்டும். சில சொட்டுகள் உணவுக்குப் பயன்படுத்தும் வண்ணத்தைச் (Food colour) சேருங்கள். சோப்புத் திரவத்தை ஒரு ஸ்பூன் ஊற்றுங்கள்.

2. தனி கோப்பையில் வெது வெதுப்பான தண்ணீரையும், உலர்ந்த ஈஸ்ட்டையும் கலக்கிக் கொள்ளுங்கள்.

3. புனலை எடுத்து பிளாஸ்டிக் பாட்டிலின் வாய்ப்புறத்தில் வைத்து, கோப்பையில் உள்ள வெதுவெதுப்பான தண்ணீர், உலர்ந்த ஈஸ்ட் கலவையை ஊற்றுங்கள்.

4. ஊற்றியதும், பற்பசையைப் பிதுக்கியது போல, பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நுரை பொங்கி வரும்.
உலகின் மிகப்பெரிய யானையின் பற்பசை
அப்படி வெளிவருகிற நுரைப்பசை மெகா சைஸ் பற்பசை போல இருப்பதால் இதை 'யானை பற்பசை' (Elephant Toothpaste) என்கிறார்கள். எரிமலை போல பொங்கி வழிகிற நுரைக் குமிழிகள் ஆக்சிஜனால் நிரப்பப் பட்டிருக்கும்.

இந்தச் சோதனையில் ஈஸ்ட் சிறந்த ஊக்கியாகச் செயல்பட்டு ஹைட்ரஜன் பெராக்சைடில் இருந்து ஆக்சிஜனை வேகமாக வெளியேற்று கிறது.

'யானை பற்பசை' எதற்கும் பயன்படுவதில்லை. ஆனால், மிகக்குறை வான பொருட்களைக் கொண்டு எளிய அறிவியல் சோதனையாகப் பள்ளிகளில் செய்து காட்ட இது உதவுகிறது.

முதுகு வலி உயிர் போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !

ஹைட்ரஜன் பெராக்சைட் உடலில் பட்டால் எரிச்சல் ஏற்படுத்தக் கூடியது. அதனால் கையுறை, பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து இந்தச் சோதனையை செய்யுங்கள். ஆசிரியர்கள் அல்லது பெரியவர்கள் மேற்பார்வை அவசியம்.
யானைக்குப் பல் இருக்கிறதா?

யானையைப் பார்க்கும் போது அதன் பெரிய இரண்டு வெள்ளைத் தந்தங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது.

யானைக்கு மொத்தம் 4 பற்கள் இருக்கிறது. இந்தப் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை. யானையின் ஒரு பல் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்... 

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப் படுத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings