குமரியில் தந்தைக்கு மது வாங்கிக் கொடுத்து போதையில் சாய்த்து விட்டு, அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.
25 நாட்களாக தலைமறை வாக இருந்து வந்தவர் தற்போது சிக்கி யுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடி தொழிலாளி.
அவருடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும், அதே பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான ஆரோக்கிய ஜீன்.
இருவரும் பணி முடித்து விட்டு மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி ஆரோக்கிய ஜீன், மது வாங்கிக் கொண்டு, தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, வீட்டிற்குள் நண்பரின் வாய் பேச முடியாத, காது கேட்காத மனைவியும், அவரது 11ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதை யும் பார்த்துள்ளார்.
இதை அடுத்து குரூரமாக யோசித்த ஆரோக்கிய ஜீன், நண்பருக்கு அதிக அளவில் மதுவை ஊற்றிக் கொடுத்து, போதையில் சாய்த்துள்ளார்.
பின்னர், வீட்டிற்குள் இருந்த 11ஆம் வகுப்பு படிக்கும் நண்பரின் மகளை மிரட்டி ஆரோக்கிய ஜீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என மாணவியை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
போதை தெளிந்து காலையில் எழுந்த தந்தை யிடம் நடந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன அந்த மீன்பிடி தொழிலாளி, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரோக்கிய ஜீன் மீது புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக் காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஆரோக்கிய ஜீன் தலைமறை வானார்.
ஊருக்குள் வருவதும், போலீசார் நெருங்கியதும் மீண்டும் தலைமறை வாவதும் என போக்கு காட்டி வந்தார்.
இந்நிலையில், போலீசாரின் பிடி இறுகியதை அடுத்து, மாவு கட்டுக்கு பயந்து பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.
நண்பருக்கு மது வாங்கிக் கொடுத்து போதையில் தள்ளி விட்டு அவரது மகளை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குமரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments