கூலி தொழிலாளிக்கு ரூ1 கோடி... எப்படி தெரியுமா?

0
மேற்கு வங்க மாநிலம் கல்னா பகுதியைச் சேர்ந்தவர் இந்திர நாராயணன். கூலித் தொழிலாளியான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். 
கூலி தொழிலாளிக்கு  ரூ1 கோடி


அப்படியாக இவர் நாகாலாந்து மாநில லாட்டரியை ரூ60க்கு வாங்கி யுள்ளார். இந்த லாட்டரி சீட்டிற்கு தற்போது ரூ1 கோடி பரிசு விழுந்துள்ளது.

இதைப் பார்த்ததும் திக்குமுக்காடி போன நாராயணன் முதலில் நம்பவில்லை.

பின்னர் அதை உறுதி செய்ததும் என்ன செய்வ தென்று தெரியாமல் முழித்தார்.

ஒரு பக்கம் லாட்டரியில் பரிசு விழுந்த சந்தோஷம் இருக்க மறுபுறம் பயமும் அவரை தோற்றிக் கொண்டது. 

லாட்டரி பணம் விழுந்ததை அறிந்து வெளியில் செல்லும் போது யாராவது தன்னைக் கடத்தி லாட்டரி சீட்டை பிடுங்கி விடுவார்களோ என அச்சம் வந்தது.

இதை யடுத்து அவர் போலீசில் தனக்கு லாட்டரி சீட்டை கொடுத்து வங்கிக் கணக்கில் பணம் வரும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். 


கொடுக்கிற கடவுள் கூரை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்பார்கள் இது அது இந்திர நாராயணனின் வாழ்வில் உண்மையாகி விட்டது.

லாட்டரி சீட்டை பொருத்தவரை ஊரில் பல இடங்களி லிருந்து மக்கள் வாங்கும் லாட்டரி சீட்டின் மூலம் வசூலாகும் பணத்தை வைத்து ஒருவருக்குப் பரிசு வழங்கப் படுகிறது. 

ஒருவர் பரிசு பெற்று வாழ்வில் வளம் பெற மற்றவர்கள் வாழ்க்கை சீரழிகிறது என்பதால் தான் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளு க்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. 

இருந்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே திருட்டுத் தனமாக லாட்டரி சீட்டு விற்பனை சட்ட விரோதமாக நடந்து தான் வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings