130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !

0
19ம் நூற்றாண்டில் ஈரான் மக்கள் பலர் லண்டனின் கிழக்கு எல்லைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். பலர் அகதிகளாக அந்த பகுதிக்கு வந்தனர்.
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
ஒரு காலத்தில் மக்கள் ஆரவாரம் அன்று கிடந்த பகுதி சில காலங்களில் ஜன நெருக்கடி பகுதியாக மாறிக் கொண்டிருந்தது. 

அங்குள்ள மக்கள் பலர் வேலை வாய்ப்புகள் அன்று கூலித்தொழிலாளி யாக வேலை பார்த்தனர். சிலருக்கு அந்த வேலையும் கிடைக்க வில்லை.

செக்ஸ் தொழிலாளர்கள்

ஒரு கட்டத்தில் வேலை கிடைத்தவர்கள், வன்முறை, வழிப்பறி, கொலை ,கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடத் துவங்கினர். பலர் கூலிப் படைகளாகவே மாறினர். 

இதனால் லண்டனின் கிழக்கு எல்லைப்பகுதி ஒரு பாதுகாப்பற்ற பகுதியாகவே மாறியது. பெண்கள் பலர் செக்ஸ் தொழிலாளர் களாக மாறினர். 

அந்த கால கட்டங்களில் சுமார் 1200 பெண்கள் விலை மாதுகளாக பணியாற்றியதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

முதல் கொலை

இந்நிலையில் 1888ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி லண்டன் கிழக்குப் பகுதியில் உள்ள ஒயிட் சேப்பல் பகுதியில் மேரி ஆன் நிக்கோலஸ் என்ற பெண் பிணமாக மீட்கப் பட்டாள். 

விலை மாதுவாக பணியாற்றி வந்த அவள் கழுத்தில் இரண்டு முறை வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு அறுக்கப் பட்டிருந்தது. இந்த கொலையை யார் செய்தார் என் விசாரணை நடந்து வருகிறது.

அனி சேப்மேன்
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ம் தேதி அனி சேப்மேன் என்ற பெண் பிணமாக மீட்கப் பட்டார். அவரும் நிக்கோலஸ் போலவே கழுத்தில் இரண்டு வெட்டு மற்றும் பெண்ணுறுப்பு பகுதியில் வெட்டுடன் மீட்கப் பட்டாள் 

இவளது பிரேதப் பரிசோதனை யில் இவளின் பிறப்புறுப்பு வழியாக இவளது கர்ப்பப்பை வெளியே எடுக்கப்பட்டது தெரிய வந்தது. 

ஆனால் அவள் கொலை செய்யப்பட்ட இடத்தில் கர்ப்பப்பை இல்லை இதனால் கொலை செய்தவர் தான் அதை எடுத்துச் சென்றிருப்பார் என யூகிக்கப் பட்டது.

எலிசெபத் ஸ்டெரெய்டு

இந்த கொலை நடந்து சில நாட்களில் அதாவது 30ம் தேதி செப்டம்பர் 1888ல் எலிசபெத் ஸ்டெரெய்டு என்ற பெண்ணின் உடல் சடலமாகக் கிடைத்தது. இவரது கழுத்து அறுக்கப்பட்டு பிறப்புறுப்பு சிதைக்கப் பட்டுக் கிடந்தார்.

கேத்ரீன் எல்டோஸ்
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
அதே நாளில் கேத்ரீன் எல்டோஸ் என்ற பெண்ணும் வேறு ஒரு இடத்தில் இதே போலக் கழுத்து அறுக்கப்பட்டு பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு இறந்து கிடந்தார். 

கேத்ரீன் என்பவரின் கிட்னி மற்றும் கர்ப்பப்பை அவரது உடலி லிருந்து பிரித்து எடுக்கப் பட்டிருந்தது.

சாட்சிகள்

இந்த நான்கு மரணங்களும் ஒரே மாதிரி நிகழ்ந்ததைப் பார்த்த பின்பு இதை ஒரே ஆள் செய்திருக்கக் கூடும் என அந்நாட்டு போலீசாக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப் படுத்தினர். 

அப்பொழுது கடைசியாக நடந்த இரண்டு மரணங்கள் நடந்த நேரத்தில் அந்த பகுதியி லிருந்த சிலர் சந்தேகப்படும் படி இரண்டு நபரைப் பார்த்ததாகவும், 

ஒருவர் பார்க்க டீசென்டாக டிரெஸ் செய்திருந்த தாகவும், அவருடன் ஒரு பெண் இருந்ததா கவும் கூறினர்.

மீண்டும் கொலை
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
இந்நிலையில் 1888ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி கெல்லி என்ற பெண் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப் படுகிறார். 

இந்த பெண் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்ட போது கெல்லியின் இதயமே அவரது உடம்பி லிருந்து அறுத்தெடுக்கப் பட்டிருந்தது. 

இந்த 5 கொலைகளும் கிட்டத்தட்ட 3 மாத இடைவெளியில் ஒரே நபரால் செய்யப் பட்டது என்பதைத் தவிர போலீசாரிடம் எதுவும் இல்லை.

ஒற்றுமைகள்

இந்நிலையில் இறந்த 5 பேருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இந்த 5 பேரும் பாலியல் தொழிலாளிகள் அந்த பகுதியில் பாலியல் தொழில் அதிகமாக நடந்து வந்த நிலையில் 

பாலியல் தொழிலாளி களாகப் பார்த்து இந்த கொலைகள் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

திருப்பு முனை
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
இந்நிலையில் இந்த கொலை யாளியைப் பிடிக்க வேண்டும் என்று எல்லாம் போராட்டங்கள் நடந்தது. போலீசார் இந்த கொலையாளியை ஒயிட் சேப்பல் கொலையாளி என்ற பெயர் வைத்துத் தேடி வந்தனர். 

அப்பொழுது தான் யாரும் எதிர் பாராத விதமான இந்த சம்பவத்தில் ஒரு பெரும் திருப்பு முனை சம்பவமே நடந்தது.

மர்ம கடிதம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் லண்டனில் உள்ள அனைத்து ஊடகங்களு க்கும், ஒரு லெட்டர் ஒன்று சென்றது. அதில் இந்த கொலைகளைச் செய்து வருவது தான் தான் எனவும், 

இது போல் இன்னும் நிறையக் கொலைகளைச் செய்வேன் என்றும், அதில் எழுதப் பட்டிருந்தது. மேலும் அதில் ஜாக் தி ரிப்பர் எனக் கையெழுத்திடப் பட்டிருந்தது.

ஜாக் தி ரிப்பர்
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மறுநாள் செய்தித் தாள்களில் இந்த பெயர் தான் தலைப்பு செய்தியே லண்டன் முழுவதும் யார் இந்த ஜாக் தி ரிப்பர் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் தோற்றியது. 

ஆனால் இந்த கடிதம் மூலமும் போலீசாருக்கு எந்தவித தடயமும் கிடைக்க வில்லை.

தவறாக பயன்படுத்தப்பட்ட கடிதம்

இந்த கடிதம் வைரலான நிலையில் அடுத்தடுத்த நாள் வேறு வேறு பெயர்களில் இந்த கொலை களைச் செய்வது நான் தான், எனது கோரிக்கை இது தான். 

இது நிறைவேறும் வரை கொலைகள் தொடரும் என மிரட்டல் விடுத்து ஒவ்வொருவரும் நாளும் ஊடகங்களு க்குக் கடிதம் வரத் துவங்கியது. 

இதனால் இந்த பரபரப்பைப் பயன்படுத்தி பலர் அவரவர் நினைத்ததைச் சாதிக்க நினைப்பதாக ஊடகத்தினர் கருதினர்.

பிரபலமான ஜாக் தி ரிப்பர்
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
இதனால் மற்ற கடிதங்களைப் புறந்தள்ளி விட்டு முதலில் வந்த ஜாக் தி ரிப்பர் என்ற பெயரை தான் எல்லோரும் கொலை யாளியின் பெயர் எனக்கருதினார். ஊடகங்களும் அந்த பெயர்களையே செய்திகளில் பயன்படுத்தினர்.

யார் ஜாக் தி ரிப்பர்?

இதற்கிடையில் ஒயிட் சேப்பல் பகுதியில் மேலும் சில கொலைகள் நடந்தன. இவை யெல்லாம் ஜாப் தி ரிப்பர் தான் செய்திருப்பார் என பேசப்பட்டது. 

ஆனால் இந்த கொலைகள் சரியாக ஜாக் தி ரிப்பர் செய்த கொலைகளின் பேட்டன் போல இல்லை.

கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை

இந்த கொலைகளைச் செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் பல விதமான முயற்சிகளை எடுத்தும் எதுவும் பலனில்லை. 
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
சில டாக்டர்கள் மீது போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினாலும் அவர்கள் தான் அதைச் செய்தார்கள் என போலீசாரால் நிரூபிக்கவே முடிய வில்லை. 

இந்த வழக்கை விசாரித்த போலீசார் பலர் தன்னால் இந்த வழக்கை முடிக்க முடியவில்லை என அவர்களே விலகிக் கொண்ட சம்பவங்களும் நடந்தன.

தீராத மர்மம்
130 ஆண்டுகளாக போலீஸ் தேடும் கொலையாளி !
இன்று வரை அந்த கொலையாளி யார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து நிறையத் திரைப்படங்கள், புத்தகங்கள் வெளியாகி  விட்டன. 

இந்த ஜாக் தி ரிப்பர் கடைசிவரை யார் என்றே தெரியாமல் போய் விட்டது. 

2015ம் ஆண்டு ஜாக் தி ரிப்பர் என்ற பெயரில் லண்டனில் ஒரு மியூசியமே துவங்கப்பட்டு ஜாக் தி ரிப்பர் குறித்த கொலை மற்றும் மர்மங்கள் குறித்து பட்டியலிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings