திருடப்பட்ட 15-ம் நூற்றாண்டை சேர்ந்த குர்ஆன் மீட்பு !

ராஜஸ்தான் மாநிலம் பிகில்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின ருக்கு 15-ம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய மன்னர் அக்பர் 
15-ம் நூற்றாண்டை சேர்ந்த குர்ஆன் மீட்பு


பொன் எழுத்துக்க ளால் எழுதப்பட்ட இஸ்லாமிய மத புனிதநூலான குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி யுள்ளார்.

பல நூற்றாண்டு களாக பராமரிப்பில் வைக்கப் பட்டிருந்த அந்த குர்ஆன் கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உரிமையாளர் வீட்டில் இருந்து மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருடனை பல மாதங்களாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த குர்ஆனை திருடிய ஜம்வராம்ஹர் பகுதியை சேர்ந்த பன்வாரி என்ற நபர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட குர்ஆன் மீட்கப் பட்டுள்ளது.


பன்வாரி தான் திருடிய 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த குர்ஆனை பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு நபருக்கு 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டம் தீட்டி யிருந்ததையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
இதை யடுத்து அவரை கைது செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings