மார்ஸ் 2020 ரோவர்.. அணு சக்தி ரோபோ.. மாஸ் நாசா !

0
நாசா இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு அதிக சக்தி வாய்ந்த ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதற்கான அறிமுக விழா நாசா தலைமை யகத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது.
மார்ஸ் 2020 ரோவர்.. அணு சக்தி ரோபோ.. மாஸ் நாசா !
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அங்கு நாசா நிறைய ரோவர்களை அனுப்பி உள்ளது. 2003 ஜூன் மாதம் அனுப்பப்பட்டு, 2004 ஜனவரி மாதம் ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. 

இது மனித வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப் படுகிறது. இந்த வெற்றியை மக்கள் அந்த ரோவர் தரையிறங்கிய போதே பெரிய அளவில் கொண்டாடினார்கள். 

2004லிலேயே நாசா இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தியது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்தது.

அடுத்து என்ன
அணு சக்தி ரோபோ
அடுத்து நாசா செவ்வாய் கிரகத்திற்கு க்யூரியாசிட்டி ரோவரை அனுப்பியது. அதுவும் சரியாக இறங்கி செவ்வாயில் ஆராய்ச்சி செய்தது. 

இதை அடுத்து செவ்வாயை ஆராய வரிசையாக ரோவர்களை உருவாக்கியது நாசா. மற்ற நாடுகளும் இந்த முயற்சியில் இறங்கியது.

புது வீடு கட்டும் போது கரையான் வருவதை‌ தடுப்பது எப்படி?

என்ன செய்கிறார்

நாசா இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு அதிக சக்தி வாய்ந்த ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதற்கான அறிமுக விழா நாசா தலைமைய கத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது. 

இது லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உருவாக்கப் பட்டது. இதன் முதல் டெஸ்ட் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எப்போது ஏவுகிறார்கள்
ரோபோவை எப்போது ஏவுகிறார்கள்
நாசா விஞ்ஞானிகள் இதை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். ஜூலை மாதம் 17ம் தேதி இந்த வருடம் இந்த ரோவர் ஏவப்படுகிறது. 

இதற்கு மார்ஸ் 2020 ரோவர் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. செவ்வாயில் இறங்கும் நாசாவின் ஐந்தாவது ரோவர் ஆகும் இது.

நோக்கம் என்ன

2026ல் செவ்வாய் கிரகத்திற்கு நாசா மனிதர்களை அனுப்புகிறது. அதற்காக செவ்வாயில் இருக்கும் வாழ்வியல் கூறுகளை ஆராய வேண்டும் என்று நாசா இந்த முடிவை எடுத்துள்ளது. 

செவ்வாயின் வரலாறு மற்றும் அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பதை இந்த ரோவர் ஆராய்ச்சி செய்யும்.

என்ன சிறப்பு
மார்ஸ் 2020 ரோவர் சிறப்பு
இதில் மொத்தம் 23 கேமராக்கள் இருக்கும். இதன் மூலம் இந்த ஆராய்ச்சி நடக்கும். அதே போல் லேசர் சென்சார்கள் இருக்கும். 

இது கெமிக்கல் ஆராய்ச்சி களையும் செய்யும். இது பெரிய கார் அளவில் இருக்கும். மொத்தம் 6 டயர்கள் இருக்கும்.இதனால் இது மிகவும் உறுதியானது ஆகும்.
அணு

அதேபோல் இதில் சிறிய அணு சக்தி கருவி உள்ளது. இதனால் அதேவே மின்சாரம் தயாரித்து எரிபொருள் இல்லாமல் பயணம் செய்யும். 

ஒரு நாளைக்கு செவ்வாயிலில் இது 180 மீட்டர் மட்டுமே செல்லும். இதன் அறிமுகம் உலக நாடுகளை பெரிய ஆச்சர்யத்திற்கு உள்ளாகி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings