திருமண விழாவுக் காக ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் பணத்தை எடுப்பது தொடர்பான வழி காட்டுதல் களை ரிசர்வ் வங்கி வெளியி ட்டுள்ளது.
*பணம் எடுக்கும் வங்கிக் கணக்கில் நவம்பர் 8ம் தேதிக்கு முன்ன தாக எடுக்கப் பட வேண்டிய தொகை இருப்பு இருந் திருக்க வேண்டும்.
இந்த வகையில் அதிக பட்சமாக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் எடுக்கலாம்.
இந்த வகையில் அதிக பட்சமாக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் எடுக்கலாம்.
* டிசம்பர் 30 மற்றும் அதற்கு முந்தைய தேதிகளில் திருமணம் நடத்தத் திட்ட மிட்டிருந் தால் மட்டுமே இந்த சலுகையைப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
* மணமகன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஆகியோரில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக் கப்படுவர்.
* இதற்காக ரிசர்வ் வங்கி தரப்பில் பிரத்யேக விண்ணப்பப் படிவம் வெளியிடப் பட்டுள்ளது.
அந்த விண்ணப்பப் படிவத்தில் ,
1. பணம் எடுப்பவரின் பெயர், எடுக்க வேண்டிய தொகை, பான் கார்டு எண், மணமகன், மணமகள் பெயர், முகவரி, திருமண தேதி ஆகிய தகவல் களை நிரப்ப வேண்டும்.
மேலும், திருமணம் தொடர்பாக மேலே அளிக்கப் பட்டுள்ள தகவல்கள் உண்மை என்ற சொந்த உறுதி மொழியையும் விண்ணப் பதாரர் அளிக்க வேண்டும்.
2.யாருடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமோ அவரது பான் கார்டு, மணமகன், மணமகள்
ஆகியோரின் அடையாளச் சான்று ஆகிய வைகளின் நகல் களை இணைக்க வேண்டும்.
3. திருமண அழைப்பிதழ், முன்பண ரசீது (திருமண மண்டபம், சமையல் கலைஞர் களுக்கான தொகை) உள்ளிட்ட வைகளின் நகல்கள் இணைக் கப்பட வேண்டும்.
4. வங்கிக் கணக்கு இல்லாதவரே இந்த வசதியைப் பயன்படுத்தி ரொக்கமாக பணம் எடுக்க முடியும்.