இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர் கதையாகி யுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி பல உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.
சீன நாட்டில் உள்ள கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜீனிங்கில் செஞ்சிலுவை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ மனைக்கு வெளியே பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த நிறுத்தத்திற்கு அருகே நேற்று முன்தினம் உள்ளுர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் பேருந்து வந்து கொண்டு இருந்துள்ளது. இந்த நேரத்தில் சாலையில் எதிர்பாராத விதமாக புதைகுழி உருவாகி யுள்ளது.
இந்த புதைகுழியில் பேருந்து சிக்கியதை அடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் உயிருக்கு அலறவே, பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மேலும், பேருந்து விழுந்ததற்கு அருகில் இருந்த பொது மக்களும் புதை குழியில் விழுந்தனர்.
பேருந்து புதை குழிக்குள் விழுந்தவுடன் வெடிப்பும் நிகழ்ந்த நிலையில், இது தொடர்பாக மீட்பு படை யினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மக்களை மீட்டனர்.
இந்த விபத்தில் சுமார் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 16 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதி செய்யப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு புதை குழியில் சிக்கி 3 பேர் பலியாகி யுள்ளதும்,
கடந்த 2013 ஆம் வருடத்தில் 10 மீ ஆழத்தில் புதைகுழி உருவாகி 5 பேர் பலியாகி யுள்ளதும் தெரிய வந்துள்ளது.
Thanks for Your Comments