புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் 67,000 தெரியுமா?

0
உலகம் முழுவதும் நேற்று 4,00000 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் இந்தியாவில் தான் அதிக பட்சமாக 67,385 குழந்தைகள் பிறந்து முதலிடத்தைப் பெற்றுள்ள தாக ஐ.நா குழந்தைகள் முகமை அறிவித்துள்ளது.
புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் 67,000

ஐ.நா சபை ஒவ்வொரு ஆண்டும் உலகில் புத்தாண்டு அன்று பிறக்கும் குழந்தை களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வெளியிடும். 

அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் புத்தாண்டு தினமான நேற்று 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. 

அதில் இந்தியாவில் மட்டும் 67,385 குழந்தைகள் பிறந்து உலக அளவில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட சீனாவையே இரண்டாம் இடத்திற்கு தள்ளி யுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

உலகிலேயே இந்த ஆண்டின் முதல் குழந்தை ஃபிஜி நாட்டில் பிறந்துள்ளது. கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது. 

இப்படி உலக அளவில் பாதியளவு குழந்தைகள் எட்டு நாடுகளில் பிறந்துள்ளன. அதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. சீனா 46,299 குழந்தைகள் பிறந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 

அடுத்தடுத்து பாகிஸ்தான் 16,787, இந்தோனேசியா 13,020, அமெரிக்கா 10,452 , கோங்கோ 10,247 மற்றும் எத்தியோபியா 8,493 என நேற்று மட்டும் இத்தனைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

அதோடு பிறந்த ஒரு மாதத்திலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியனாக இருக்கிறது. 

அதோடு 5 வயதை எட்டுவதற் குள்ளும் சத்துக் குறைபாடு காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. 

இருப்பினும் இந்த எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ள தாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனாலும் பிறந்த குழந்தைகள் ஒரே மாதத்தில் இறக்கும் நிலை இன்னும் குறைந்த பாடில்லை. ஏறு முகமாகவே உள்ளது என்கிறது. 1990-ல் 40 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் கடந்த 2018 ஆண்டில் 47 சதவீதமாக இருந்துள்ளது.

அடுத்ததாக ஒவ்வொரு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மக்கள் தொகை 2050-க்குள் எந்த அளவு உயரும் என கணித்துள்ளது. 

அதன்படி, இந்தியாவில் 2050-ம் ஆண்டுக்குள் 273 மில்லியன் மக்கள் தொகையையும் அடுத்ததாக நைஜீரியா 200 மில்லியன் மக்கள் தொகையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இவ்வாறாக இந்த இரண்டு நாடுகளும் 2050க்குள் 23 சதவீதம் மக்கள் தொகை அதிகரிப்பை கொண்டிரு க்கும் என்கிறது.

2019 ஆம் ஆண்டில் 1.43 பில்லியன் மக்களுடன் சீனாவும், 1.37 பில்லியனுடன் இந்தியாவும் நீண்ட காலமாக உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளாக உள்ளன. 

நூற்றாண்டின் இறுதியில் , இந்தியா கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 

அதன் பின்னர் சீனா 1.1 பில்லியன், நைஜீரியா 733 மில்லியன், அமெரிக்கா 434 மில்லியன், பாகிஸ்தான் 403 மில்லியன் மக்கள் தொகையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings