தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய் விட்டதாக கருதப்பட்ட தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தமது இருப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது.
தேமுதிக தொடங்கப்பட்டு விஸ்வரூப வெற்றியைப் பெற்று பிரதான எதிர்க் கட்சியாகவும் சட்ட சபையில் கோலோச்சியது.
பின்னர் தேமுதகவில் ஏற்பட்ட குழப்பங்கள் அக்கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பின்னர் தேமுதகவில் ஏற்பட்ட குழப்பங்கள் அக்கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய் விட்டதாகவே கருதப்பட்டது.
இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய் விட்டதாகவே கருதப்பட்டது.
ஆனால் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந் திருக்கிறது தேமுதிக.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு களின் படி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 82 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது.
திமுக, அதிமுகவை தொடர்ந்து காங்கிரஸ் 88 இடங்களைப் பெற்ற நிலையில் தேமுதிக 4-வது இடத்தை பெற்றிருக்கிறது.
மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது. இரு இடது சாரிகளும் இணைந்தே 77 இடங்களைத் தான் பெற்றுள்ளனர்.
ஊரகப் பகுதிகளில் தேமுதிக வுக்கு இன்னமும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்து கின்றன.
2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் 330 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் களை தேமுதிக பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது
Thanks for Your Comments