இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் படுகிறது. அதற்கான நிலம் கையகப் படுத்தும் பணி தொடங்கி விட்டது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப் படும். அதற்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக 6 ஆய்வு மையம் உருவாக்கப்படும்.
சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும்.
சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும்.
சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் ‘ஆர்பிட்டர்’ செயல்பட்டு வருகிறது. அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments