தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங் களை தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடந்தது.
இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. 24 மணி நேரமாகியும் பணிகள் தொடர்ந்ததால் அடுத்த நாளும் வாக்குகள் எண்ணப் பட்டன.
ஒரு வழியாக பணிகள் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
வழக்கமாக ஆளும் கட்சிக்கு சாதகமாகத் தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும்.
வழக்கமாக ஆளும் கட்சிக்கு சாதகமாகத் தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும்.
ஆனால் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க் கட்சியும் சமபலத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதை யடுத்து மறைமுகத் தேர்தலுக் கான கூட்டம் விரைவில் நடைபெற வுள்ளது.
இதற்காக பிரதான கட்சிகள் தற்போதே தயாராகிக் கொண்டிருக் கின்றன. அதாவது, 314 ஒன்றியங் களுக்கான உறுப்பினர் தேர்தல் நடந்து முடிவடைந் துள்ளது.
இவற்றிற்கான தலைவர் களை உறுப்பினர்கள் ஒன்றுகூடி தேர்வு செய்வர். இந்நிலையில் 40க்கும் அதிகமான ஒன்றியங்களில் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே மேற்கூறிய ஒன்றியங்களின் தலைவர் பதவி எந்தக் கட்சிக்கு என்பதை தேர்வு செய்வதில் சுயேட்சைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றனர்.
இவர்களின் ஆதரவை பெற அதிமுக, திமுக கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் சுயேட்சை களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கவும் பிரதான கட்சிகள் தயங்காது என்று எதிர் பார்க்கப் படுகிறது.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments