சேர்மன் பதவிக்காக கவுன்சிலரைக் கடத்திய அதிமுக?

0
திமுக சார்பில் வெற்றி வெற்றி பெற்ற பெண் கவுன்சிலரை, அதிமுகவினர் கடத்தி சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் மற்றும் 
சேர்மன் பதவி


இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் சாயல்குடி காவல் நிலையத்தில் புகாரளித் துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 11, திமுக 10, சுயேட்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்

இந்நிலையில், சேர்மன் பதவியை தக்க வைக்க அதிமுகவுக்கு பெரும் பான்மை தேவை என்பதால் 7 ஆவது வார்டு பகுதியில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் வாசுகியை 

அதிமுக ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக வாசுகியின் கணவர் சின்னமலை, சாயல்குடி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

சினிமாவை ஒத்த இந்த சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


கடலாடி ஒன்றிய சேர்மன் பதவிக்கு, சூழ்ச்சி செய்து அதிமுகவை வெற்றி பெற செய்ய, திமுக பெண் கவுன்சிலரை கடத்தி விட்டதாக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி குற்றச் சாட்டியுள்ளார்.. 

மேலும், காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் வலியுறுத் தப்பட்டு உள்ளது. .

திமுக ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்டது குறித்து ராமநாதபுரம் பாராளுமன்ற எம்பி நவாஸ்கனி மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி ஆகியோர் சாயல்குடியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

திமுக பெண் கவுன்சிலரை அதிமுகவினர் அராஜகமாகக் கடத்திச் சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்ற த்தையும் பரபரப்பை யும் ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings