காதல் திருமணம் - பட்டப்பகலில் கொலை முயற்சி !

1 minute read
0
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். 
காதல் திருமணம்

இவரது மகன் ராஜ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

ஆனால், இந்தத் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது .

இந்நிலையில், ராஜ்குமார் இன்று பெரிய குளத்தில் தனியாக மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். 

ராஜ்குமாரைப் பின் தொடர்ந்து வந்த காயத்ரியின் தந்தை சேகர், மற்றும் காயத்ரியின் சகோதரர்கள் பிரகாஷ்,ராஜேஷ் ஆகியோர் உருட்டுக் கட்டை மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் உருட்டுக் கட்டையால்  தாக்கி உள்ளனர்.

மேலும் காயத்ரியின் தந்தை சேகர், ராஜ்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இந்தத் தாக்குதலில் ராஜ்குமார் நிலை குலைந்துள்ளார். 

பொது மக்கள் அதிகம் கூடி, தாக்குதலில் ஈடுபட்டவர் களை பிடிக்க முயன்றதால் தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த ராஜ்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இச்சம்பவம் அறிந்த பெரியகுளம் வடகரை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை

கண்டு பிடிப்பதற் காக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பெரிய குளத்தில் ஆட்கள் அதிகமாக நடமாடும் கீழ வடகரை ஸ்டேட் பேங்க் பகுதியில்

பல்வேறு பொது மக்கள் கூடியிருந்த மளிகைக் கடையில் இச்சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி பொது மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. 

மேலும் சம்பவம் தொடர்பாக மளிகைக் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 4, April 2025
Privacy and cookie settings