ஒரேவொரு ஓட்டால் தீக்குளிக்க முயற்சி - அடுத்து நடந்த அதிர்ச்சி !

0
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஒரேவொரு

இதில் ஆளும் அதிமுகவிற்கு இணையாக திமுகவும் வெற்றிகளை வாரிக் குவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் எதிர்க்கட்சி புதிய சாதனை படைத்துள்ளது என்றே கூறலாம்.

இது ஆளும் தரப்பிற்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது.

யாரும் எதிர் பார்க்காத வண்ணம் பாஜகவும் வெற்றிக் கணக்கை தொடங் கியுள்ளது. 

இந்நிலையில் வார்டு உறுப்பினர் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்காமல் இருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலணியில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதில் செல்வராஜ், வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் போட்டி யிட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை யில் 197 வாக்குகள் பெற்று செல்வராஜ் வெற்றி பெற்றார். 

அதே சமயம் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட வெள்ளைச்சாமி 196 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார்.

ஒரேவொரு வாக்கு வித்தியாசம் என்பதால் வெள்ளைச்சாமி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

இருப்பினும் மனம் கேட்காமல் மீண்டும் வாக்கு எண்ணிக் கையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

உடனே வெள்ளைச் சாமியின் ஆதரவாளர்கள் இருவர் வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயற்சித்தனர்.

அதிகாரிகள் முன்னிலை யிலேயே நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அவர்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings