மல்லையா சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி - நீதிமன்றம் !

0
லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை, அவருக்கு கடன் வழங்கிய வங்கிகள் விற்று பணம் திரட்டிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
மல்லையா சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி


இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு

திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளி யாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். 

இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான வழக்கு நடந்து வருகிறது. 

அவரை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ல், பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு கோர்ட் அறிவித்தது. மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தர விட்டது. 

மல்லையா வுக்கு கடன் வழங்கிய வங்கிகள், 2013 லிருந்து அவர் வழங்க வேண்டிய 11.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.6.203.35 கோடியை திரும்ப பெற, அவரது சொத்துகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. 


கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஸ்டேட் வங்கி தலைமை யிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால், 

பறிமுதல் செய்யப்பட்ட மல்லையா வின் சொத்துகளை கலைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு மீது மும்பை நீதிமன்றம் இன்று உத்தர விட்டது.

அதன்படி விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட தரப்பினர், வரும் 18-ம் தேதிக்குள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings