இன்றைய நிலையில் வங்கியில் பணம் செலுத்தினால் வட்டி உண்டா?

கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில், கடந்த நவம்பர் 8 முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
வங்கியில் பணம் செலுத்தினால் வட்டி உண்டா?
வங்கிகள், மருத்துவ மனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் தங்களிடம் இருக்கும் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் பண இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது, செப்.16 முதல் நவ. 11 வரையிலான கால கட்டங்களில் வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையானது சுழற்சி முறையில் வங்கி வழியாக வெளி யேற்றப்படாமல்,

100 சதவிகிதத் தொகையும் தங்களிடமே இருக்கும் என கடந்த சனிக்கி ழமையன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனால், 'டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதம் குறை யலாம் என்றும், வட்டியே இருக்காது என்பது போலவும் பல்வேறு தகவல்கள் வங்கி வட்டா ரங்களில் கசிகின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ், வங்கிகளி டமிருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொள்ளும் பணத்துக்கு வட்டித் தொகை கிடைக்காது. 

ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யும் மக்களுக்கு வட்டித் தொகை தர வேண்டும் என்பதால், கிட்டத்தட்ட ஒரு வழிச்சாலையில் பயணம் செய்வது போன்ற நிலையில் பணம் சிக்கிக் கொண்டுள்ளது. 

இதனால், வங்கிக ளுக்கே சில காலம் திண்டாட்டமான நிலை தான். இப்படியே போனால் மக்க ளுக்கே வட்டித் தொகை கிடைக்காத நிலை ஏற்படும் என்றார்.
(nextPage)
உண்மை நிலவரம் என்ன? 

இப்படியான சூழலும் உருவாகுமா? என்ற நமது சந்தேகத்தை இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

செப்.16 - நவ.11 வரையிலான கால கட்டத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்த தொகை அவர்களிடமே இருக்கும்.

அதற்கான வட்டித் தொகையும் வங்கிகளுக்குக் கிடைக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மொத்த பண டெபாசிட்டில், 6 சதவிகிதம் வங்கி களிடம் இருக்கலாம் என்ற விதி இதனால் பாதிக்கப்படும்.

ஆனால், எந்த வகையிலும் மக்களுக்குத் தரும் வட்டித் தொகையை இது பாதிக்காது. இந்திய வங்கிகளின் இத்தனை ஆண்டுகால வரலாற் றில் அப்படியான சூழல் உருவான தில்லை.

சாதாரணமாக சேமிப்புக் கணக்கு மற்றும் இருப்பு கணக்குக்குத் தர வேண்டிய வட்டித் தொகை மக்களுக்குத் தரப்படும். 

ஆனால், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சூழ்நிலையில் எதையும் உறுதி படுத்திச் சொல்ல முடியாது என்றார்.
Tags:
Privacy and cookie settings