சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் 50 ஆண்டு களுக்கு முன்னர் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடைபெற்றது.
இதில், அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தான் பயின்ற வகுப்பறை களையும்,
பள்ளி வளாகத்தை யும் பார்வையிட்டதோடு தனது ஆசிரிய ர்களையும், பள்ளி நண்பர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி உணவருந்தினார்.
நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர் களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “சகமாணவர் களோடு பழகக்கூடிய, 50 ஆண்டு களுக்கு பிறகு அவர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதை என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன் என்றார். பழைய நினைவுகள். ‘மலரும் நினைவுகள்’ என்று சுட்டிக் காட்டிய ஸ்டாலின்,
எங்கெங்கு படித்தோம், எந்தெந்த வாத்தியாரிடம் அடி வாங்கினோம், எப்படி ஸ்கூலை ‘கட்’ செய்தோம், எப்படி ஸ்கூலுக்கு பென்சில் வாங்கப் போனோம், எங்கெங்கே விளை யாடினோம் என்பது உள்ளிட்ட நெகிழ்ச்சி தெரிவித்தார்.
உங்கள் வகுப்பறைக்கு சென்று பார்த்த அனுபவம் எப்படி இருந்தது என்ற செய்தியாள ர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “6 ஆம் வகுப்பில் இங்கு சேரும்போது 6 ஏ தமிழ்ப் பிரிவில் சேர்ந்தேன்.
அந்த வகுப்பையும், 7ஏ வகுப்பையும் பார்த்தேன். அந்த இடம் தற்போது கிண்டர் கார்டனாக மாறி உள்ளது.
அதன் பிறகு இப்போது உள்ள ஹெட்மாஸ்டர் அனைத்தையும் சுற்றிக் காண்பித்தார்.
அதன் பிறகு இப்போது உள்ள ஹெட்மாஸ்டர் அனைத்தையும் சுற்றிக் காண்பித்தார்.
ஓரளவிற்கு தான் மாறி உள்ளதே தவிர மற்றபடி முன்னர் இருந்தது போன்றே பராமரித்து வருகிறார்கள்” என்றார்.
இதற்கு முன்னர் மேயராக, எம்.எல்.ஏ.வாக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இங்கு வந்துள்ளேன்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக, திமுக தலைவராக வந்துள்ளேன். நாளைக்கு எப்படி வருவேன் என்பதைப் பிறகு சொல்கிறேன் எனவும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments