விருத்தாசலம் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை யின் போது சிறுவம்பார் 1-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் போட்டியில் தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சை யாகப் போட்டியிட்ட ஆனந்த கண்ணன் 987 வாக்குகள் பெற்றிருந்த நிலையில்,
867 வாக்குகளை மட்டுமே பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் துணை அதிகாரி ராஜகுமாரி அறிவித்தார்.
அதனால் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலகத்தை முற்றுகை யிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதை யடுத்து மறுவாக்குப் பதிவு நடத்துவதாக தேர்தல் அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தனர்.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கைக் காக அந்த மையத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனி நபர்கள் சிலரும் பணியமர்த்தப் பட்டிருக்கின்றனர்.
இவர்களின் உதவிக்காக பள்ளிச் சிறுவர்களை பணிக்கு அமர்த்தி யிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்த சிறுவனிடம் விசாரித்த போது,
தனது பெயர் பிரபாகரன் என்றும் சுப்பிரமணியன் என்ற ஒப்பந்ததாரர் தன்னை பணிக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ``400 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியதால் நான் காலையி லிருந்து இங்கு வேலை செய்து வருகிறேன்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு தான் பத்தாம் வகுப்பு முடித்தேன். எனக்கு 16 வயதாகிறது” என்றும் அந்தச் சிறுவன் கூறினார்.
அரசு அதிகாரிகள் சிறுவனை வேலைக்கு அமர்த்திய சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது... விகடன்....
Thanks for Your Comments