தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது. முதல் நாளிலேயே சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தும் திமுகவின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ள தாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த கூட்டத் தொடரில் உரை யாற்றுவார்.
இக்கூட்டத் தொடரில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சார்பாக திமுக எம்.எல்.ஏக்கள், சட்டசபை செயலாளரிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.
இதன் மீதான சட்ட விளக்கங் களை சபாநாயகர் தனபால் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவை பின்பற்றியே சி.ஏ.ஏ. எதிர்ப்பு சட்டத்தை தமிழகமும் நிறைவேற்ற வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை.
ஆனால் இக்கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரிப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments