பைக் திருட முயன்ற இளம்பெண்ணின் சிசிடிவி வீடியோ அதிர்ச்சி !

0
சென்னை திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராபத். இவர், கடந்த 1-ம் தேதி இரவு வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார். 
பைக் திருட முயன்ற இளம்பெண்

வீட்டில் பொருத்தி யிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை டிவியில் யாசர் அராபத் பார்த்தார். 

அப்போது பைக்கின் மேல் அமர்ந்த பெண் ஒருவர், கள்ளச்சாவி மூலம் பைக்கைத் திறந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து யாசர் அராபத் அதிர்ச்சி யடைந்தார்.

யாசர் அராபத்தைப் பார்த்ததும் இரண்டு பெண்கள் தெருவில் ஓடினர். அவர்களில் ஒரு பெண், பொது மக்களிடம் சிக்கினார். இதை யடுத்து அந்தப் பெண் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார். 

இன்ஸ்பெக்டர் சீத்தாராம், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணை யில் அந்தப் பெண்ணின் பெயர் சந்தியா (19). சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.

விசாரணையின் போது சந்தியா, ``நான் ஐஸ்ஹவுஸ் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறேன். புத்தாண்டை யொட்டி புதுச்சேரியி லிருக்கும் என் தோழி, மோனிஷா சென்னை வந்திருந்தார். 

அவர் தான் என்னிடம் கள்ளச்சாவி ஒன்றைக் கொடுத்து பைக்கைத் திருடக் கூறினார். அதன்படி நான் பைக்கைத் திறக்க முயற்சி செய்தேன். 

அதற்குள் என்னையும் தோழி மோனிஷா வையும் பிடிக்க சிலர் விரட்டினர். நான் மட்டும் சிக்கிக் கொண்டேன். மோனிஷா தான் சாவியை என்னிடம் கொடுத்தார். 
கள்ளச்சாவி

பைக் திருடி விற்றால் பணம் கிடைக்கும் என்று கூறியதால் இரவில் 10 மணிக்கு பைக் திருடச் சென்றோம்" என்று கூறியுள்ளார்.

சந்தியா கொடுத்த தகவலின்படி மோனிஷாவை போலீஸார் தேடி வருகின்றனர். 

மோனிஷாவும் சந்தியாவும் பைக் திருடும் வீடியோவில், 1-ம் தேதி இரவு 10 மணியளவில் சந்தியாவும் மோனிஷாவும் தாயார் சாகிப் தெருவுக்குள் வருகின்றனர். 

அப்போது தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. யாசர் அராபத்தின் பைக்கை நோட்டமிடும் சந்தியா, பின்னர் அதன் மேல் அமர்ந்திருந்து கள்ளச்சாவி மூலம் பைக்கை திறக்க முயற்சி செய்கிறார். 

அப்போது, எதிர் வீட்டின் படியில் மோனிஷா அமர்ந்திரு க்கிறார். யாசர் அராபத் வெளியில் வந்ததும் மோனிஷாவும் சந்தியாவும் தப்பி ஓடுகின்றனர். 

அப்போது சந்தியா சிக்கியதும் அவரை ஒரு வீட்டின் க்ரீல் கேட்டுக்குள் வைத்து பொது மக்கள் சிறைப் பிடிப்பதோடு வீடியோ முடிவடைகிறது.

அடுத்த வீடியோவில், நான் திருடவில்லை என்று சந்தியா கூறுகிறார். அதற்கு பொது மக்கள் நீ திருடியதை சிசிடிவி மூலம் பார்த்து விட்டு தான் உன்னைப் பிடிக்க வந்தோம் என்று கூறுகின்றனர். 

அதற்கு சந்தியா, `யோவ், என்னை ஸ்டேஷன்ல கொண்டு போய் விடு' என்று தைரியமாக எதிர்த்துப் பேசுகிறார். 
மோனிஷாவை போலீஸார் தேடி வருகின்றனர்

திருட முயன்றதற் காக சந்தியா, மன்னிப்பு கேட்பார் என்று கருதிய பொது மக்களுக்கு அவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை யடுத்து சந்தியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார்.

காவல் நிலையத்தி லும் சந்தியா, எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலை மட்டும் கூறியுள்ளார். 

பின்னர் போலீஸார் தங்கள் பாணியில் தீவிரமாக விசாரித்த போது தான் பைக்கைத் திருட மோனிஷா தான் கூறினார் என்று தெரிவித்துள்ளார். தற்போது மோனிஷாவை போலீஸார் தேடி வருகின்றனர். 

புத்தாண்டைக் கொண்டாட இருவருக்கும் பணம் தேவைப் பட்டுள்ளது. அதற்காகத் தான் இருவரும் இரவில் பைக்கைத் திருட வந்துள்ளனர் என்கின்றனர் போலீஸார். 

பைக் திருட்டில் ஆண்கள் சிலர் ஈடுபட்டு வந்த நிலையில் சென்னையில் சந்தியா சிக்கிய தகவல் காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings