சீனாவை தொடர்ந்து உலுக்கும் கொரோனா வைரஸ் பீதி - ஆய்வுகள் !

0
சீனாவையே கதிகலங்க வைத்து வரும்.. கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது... 
சீனாவை தொடர்ந்து உலுக்கும் கொரோனா வைரஸ் பீதி


பிரீத்தி மகேஸ்வரி என்பது அவரது பெயர்.. தொற்று ஏற்பட்ட முதல் வெளி நாட்டவரான பிரீத்திக்கு மிக தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்தான் இப்போதை க்கு உலகை நடுநடுங்க வைக்கும் கொடிய நோய்...

இப்படி ஒரு வைரஸ் நோய் கடந்த 2002 - 2003ம் ஆண்டில் இதே சீனா, ஹாங்காங்கில் தான் உருவானது.. 

அப்போதே 650 பேர் உயிரிழந்து விட்டனர்.. இப்போது திரும்பவும் மத்திய நகரமான வுஹானில் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
சாதாரண சளி, இருமல் பிரச்சனையை போல தான் இதன் அறிகுறி இருக்கும்.. ஆனால், பாதிப்போ உயிரை கொல்லும் அபாயத்தை உடையது.. 

நாள்தோறும் சீனாவில் இருந்தும் ஏராளமானோர் பிற நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். அதனால் உலக அளவிலேயே இந்த கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இந்த வைரஸ் டைரக்டாக நுரையீரலை தாக்கி.. நிமோனியா காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடுமாம்.. 
வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.. 

அதனால் பாதிக்கப் பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும், சளியை துப்பினாலும், அதில் கூட வைரஸ் காற்றில் கலந்து விடுமாம்.. அதை சுவாசித்தால் மற்றவர் களுக்கும் தொற்றிக் கொள்ளுமாம்.

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, அது எப்படி இருக்கும்? இதை தடுக்க என்ன மருந்து இது எதுவுமே இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை.. ஆனால் அதற்குள் 200 பேர் பாதிக்கப்பட்டு விட்டார்கள். 


இவர்கள் எல்லோருமே சீனாவில் இருந்து திரும்பிய பயணிகள் என்பது தான் அடுத்த அதிர்ச்சி.

குறிப்பாக தெற்கு சீனாவின் ஷென்சானில் சிலருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இந்த ஷென்சான் நகரிலுள்ள பள்ளி ஒன்றில்தான் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் டீச்சராக வேலை பார்க்கிறார்..

அவர் பெயர் பிரீத்தி மகேஸ்வரி... 45 வயதாகிறது.. இவருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.. 

கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்ட நிலையில், இன்றுதான் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.
இந்த தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவர் பிரீத்தி தான்.. இப்போது இவர் தீவிரமான சிகிச்சையில் உள்ளார்.. 

கொரோனா வைரசின் பாதிப்பினை தடுக்க, இந்தியா எந்தவிதமான முன்னெச்சரி க்கையை எடுக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உலக சுகாதார அமைப்பை அணுகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings