காதல் தோல்வியால் தற்கொலை என்பது வழக்கமான ஒன்று என்றாலும், சேலத்தில், இளம் காதல் ஜோடி ஒன்று காருக் குள்ளேயே நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டது.
இந்த வருடத்தில் கடுமையான அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியதை மறக்க முடியாது.
கடந்த அக்டோபர் 10-ம் தேதியன்று நடந்த சம்பவம் இது:
சேலம் செவ்வாய் பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயது.. பிளஸ்-2 வரை படித்தவர்..
சேலம் செவ்வாய் பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயது.. பிளஸ்-2 வரை படித்தவர்..
இவருடைய அப்பா கோபி வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். அதனால் சுரேஷும் அப்பாவின் தொழிலையே கவனித்து வந்தார்.
இவர் ஜோதிகா என்ற 21 வயது பெண்ணை காதலித்தார்.. ஜோதிகா ஓமலூர் அருகே உள்ள இன்ஜினியரிங் காலேஜில் 3ம் வருடம் படித்து வந்தார்.
சுரேஷூம், ஜோதிகாவும் 2 வருடமாக காதலித்து வந்தது, வீட்டிற்கு தெரிந்து விட்டது.
எதிர்ப்பு
ரெண்டு பேருமே ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், ஜோதிகாவின் வீட்டில் ரொம்பவும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இருவரையும் கூப்பிட்டு பெரியவர்கள் கண்டித்து இருக்கிறார்கள்.
வீட்டில் எல்லோருமே சேர்ந்து திட்டி, எதிர்ப்பை காட்டவும் என்ன செய்வதென்றே தெரியாமல், சம்பவத்தன்று இந்த ஜோடி மாயமாகி விட்டது.
இதனால் பயந்து போன இரு வீட்டு நபர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர். போலீசிலும் புகார் செய்தனர்.
அரை நிர்வாண கோலம்
இதனிடையே ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சுரேஷின் கார் ஷெட் உள்ளது. அங்கேயும் போய் தேடும் போது தான், 2 டூவீலர்கள் அந்த வாசல் முன்பு நின்றிருந்தது.
அதனால் ஷட்டர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, அங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காருக்குள் தேடப்பட்டு வந்த காதல் ஜோடி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தனர்.
விசாரணை
இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் சடலங்களை கட்டிப் பிடித்து கொண்டு அழுதனர்.
தகவலறிந்து செவ்வாய் பேட்டை போலீசார், விரைந்து வந்து சடலங்களை மீட்டு விசாரணையை கையில் எடுத்தனர்.
தகவலறிந்து செவ்வாய் பேட்டை போலீசார், விரைந்து வந்து சடலங்களை மீட்டு விசாரணையை கையில் எடுத்தனர்.
அப்போது தான், பெரியவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பதால் தற்கொலை முடிவுக்கு வந்திருந்தது தெரிய வந்தது..
சாவதற்கு முன்பு இருவரும் ஜாலியாக இருந்திருக்கி றார்கள்.. இதற்கு பிறகு சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டுள்ளனர்.
சடலங்கள்
இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் சடலங்களை கட்டிப் பிடித்து கொண்டு அழுததை அந்த பகுதி மக்களால் லேசில் மறக்க முடியாது.
தகவலறிந்து செவ்வாய் பேட்டை போலீசார், விரைந்து வந்து சடலங்களை மீட்டு விசாரணையை கையில் எடுத்தனர்.
காதல் ஜோடி ஒன்று நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை மறந்துவிட முடியாது.
Thanks for Your Comments