நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு !

0
நிர்பயா குற்றவாளி களுக்கான தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு குற்றவாளி களுக்கு அறிவுறுத்தி யுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை


நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத் தண்டனைக் கான வாரண்டை, டெல்லி அமர்வு நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி பிறப்பித்தது. 

இதை யடுத்து வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படும் என அறிவிக்கப் பட்டது. 

இதனை எதிர்த்து குற்றவாளி களில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை யடுத்து முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். 

இதனை சுட்டிக்காட்டி, கருணை மனு அளிக்கப் பட்டுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகே தூக்கிலிட முடியும் என திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

எனவே வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் அவர் கூறினார். 

மனுவை விசாரித்த நீதிபதிகள், அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனைக் கான வாரண்டில் எந்த பிழையும் இல்லை என தெரிவித்தனர்.

இந்த மனு விசாரணையை இழுத்தடிப்ப தற்கான உத்தியாகவே தெரிவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 


தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம் ஒரு நீதிமன்றத்தை மற்றொரு நீதி மன்றத்துக்கு எதிராக நிறுத்தி விளையாட முயற்சிப்பதாகவும் குற்றவாளி களை சாடினர். 

இதை யடுத்து நிர்பயா குற்றவாளி களுக்கான தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து, முகேஷ் சிங் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயாவின் தாயார், நம்முடைய நீதி நடைமுறை குற்றவாளி களுக்கு சாதகமாக அமைந்துள்ள தாக வேதனை தெரிவித்தார். 

இதனிடையே, முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்ச கத்துக்கு மாநில அரசு பரிந்துரைத் துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings