நெட்டி முறித்தலால் என்னென்ன தீமைகள் வருகிறது?

0
வேலை செய்து கொண்டிருக்கும் போதே, விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளைத்து `சொடக்கு' எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும்.

இதை 'நெட்டி முறித்தல்', 'உடல் முறித்தல்' என்றெல்லாம் சொல்வார்கள்.

நெட்டி முறிக்கும் போது, `சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்தது போல உணர்வார்கள். 

`தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல'' என்கிறார் எலும்பு மருத்துவர் ஆசிக் அமீன்.

நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்பு களைப் பட்டிய லிடுகிறார்.

* விரல் எலும்புகளின் இணைப்பு களுக்கு இடையே 'சைனோவியல்' (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இது தான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய் போலச் செயல்படுகிறது. 

நீண்டநேரம் அசையாம லிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக் கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்து விடும். 

நெட்டி முறிக்கும் போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும் போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது.

* தூக்கத்தின் போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும். 

நெட்டி முறிக்கும் போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது.

* 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய நெட்டி முறித்தால், பிடி வலிமை யின்றிப் போவது, முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

* நெட்டி முறிக்கும் பழக்கத்தி லிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்த வேண்டியது அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings