உயிரை கையில் பிடித்துக் கொண்டு.. புதருக்குள் ஓடி ஒளிந்துள்ளார் புவனேஸ்வரி.. ஆனால் அப்போதும் பின்னாடியே விரட்டி சென்ற காட்டு யானை, துதிக்கை யாலேயே புவனேஸ்வரியை தூக்கி வீசி குத்தி கொன்றுள்ளது!
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ளது பாலமலை வனப்பகுதி.. பரந்து விரிந்து காணப்படும் இந்த காட்டு பகுதிக்கு அடிவாரத்தில் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒரு சிலர் பாலமலைக்கு அடிக்கடி டிரக்கிங் எனப்படும் மலை யேற்றத்தில் ஈடுபடுவார்கள்..
இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் தரப்படவில்லை.. எனினும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டுப் பகுதியில் டிரக்கிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி புவனேஸ்வரி என்பவரும் இந்த டிரக்கிங் செய்வதில் ஆர்வம் மிக்கவராம்.. கேரளாவை சேர்ந்தவர் இவர்.. கோவையில் இப்போது வசித்து வருகிறார்.. 40 வயதாகிறது..
சங்கரா கண் ஆஸ்பத்திரியில் நிர்வாக பிரிவு அதிகாரி... இவரது கணவர் பிரசாந்த் ஒரு பிசினஸ் மேன்.. இரும்பு கடை வைத்து நடத்துகிறார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால், கணவர், நண்பர்கள் என 8 பேரை அழைத்து கொண்டு பாலமலைக்கு காரில் வந்து இறங்கினார் புவனேஸ்வரி.
எல்லோரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்த போது தான், திடீரென ஒரு காட்டு யானை அவர்களை வழி மறித்துள்ளது. ஆளுக்கு ஒரு பக்கம் பயந்து தலை தெறித்து சிதறி ஓடினர்.
அப்போது புவனேஸ்வரி யால் ஒரு அளவுக்கு மேல் ஓடமுடிய வில்லை என்பதால், பக்கத்தில் இருந்த ஒரு புதரில் ஓடி ஒளிந்துள்ளார்.
அங்கும் துரத்தி சென்ற யானை, துதிக்கை யிலேயே புவனேஸ்வரியை தூக்கி வீசி குத்தி கொன்றுள்ளது. இது கணவர், நண்பர்கள் கண் முன்னாடியே நடந்துள்ளது..
அவர்கள் அனைவரும் பதறி போய் கத்தி கூச்ச லிட்டனர்.. அந்த சத்தத்தை கேட்டதும் தான் யானை அங்கிருந்து நகர்ந்துள்ளது.
உருக்குலைந்து இறந்து கிடந்த மனைவியை கண்டு அலறி அழுதார் பிரசாந்த்.. இவர்தான வனத்துறை, போலீசுக்கும் தகவல் தந்துள்ளார்..
இதை யடுத்து விரைந்து வந்த போலீசார் புவனேஸ்வரி யின் சடலத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புவனேஸ்வரிக்கு எப்போதும் இப்படி டிரக்கிங் செல்வது பிடிக்குமாம்.. வாரத்துக்கு ஒரு வனப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு டிரக்கிங் சென்று வருவாராம்..
அப்போதும் கணவர், நண்பர்களை அழைத்து கொண்டு தான் செல்வாராம்.. அந்த பகுதிகளில் வாக்கிங்கும் செல்வார் என்கிறார்கள்.
இப்படித் தான் குரங்கணியில் அனுமதி பெறாமல் டிரக்கிங் செய்ய போய்.. 23 பேர் உயிரிழந்தனர்.. மீண்டும் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வனத்துறை யினர் அனுமதியின்றி இப்படி மலையேறுவதும், வாக்கிங் போவதும் தவறு என்று தெரிந்தும் ஒருசிலர் தொடர்ச்சியான தவறுகளை செய்வது வருந்தத் தக்கது என்றும்,
ரோந்து பணி சென்று இப்படி மலையேற்றம் செய்பவர் களை தடுத்து நிறுத்த வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறை யினர் சொல்லும் போது, "வனப்பகுதிகளு க்குள் யாருமே அனுமதி யின்றி நுழையக் கூடாது..
சம்பவம் நிகழ்ந்த பாலமலை வனப்பகுதி, அடர்ந்த காட்டுப்பகுதி... நிறைய காட்டு யானைகள் நடமாட்டம் இங்கு இருக்கும்.. அதனால் தான் யாரையும் உள்ளே செல்ல அனுமதிப்ப தில்லை.
இந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களைக் கூட இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது என எச்சரித்து இருக்கிறோம்..
இனி அனுமதி யின்றி மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் மீதும் வனப்பகுதிக்குள் நுழைவோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
Thanks for Your Comments