அதிக உடற்பயிற்சி உடலுக்கு தரும் ஆபத்து !

0
உடற்பயிற்சி மூலம் கிடைக்கும் தெம்பான உணர்வை நீங்கள் ரசித்து, அந்தத் தருணத்தை எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். 
அதிக உடற்பயிற்சி தரும் ஆபத்து

ஆனால், உங்கள் தசைகள் சீராகவும், நீங்கள் விரும்பும் பலனைப் பெறவும் நடுவே ஓய்வு தேவை.

ஒர்க் அவுட் என்பது மூலக்கூறுகளை உடைத்து ஆற்றலை உண்டாக்கும் செயல்பாடாகும். 

அது மீளும் கட்டத்தில் தான் தசைகள் வலுப்பெறுகின்றன. எனவே ஒர்க் அவுட் மூலம் விரும்பும் பலனைப்பெற சரியான ஓய்வும் தேவை. 

அடிக்கடி உடற்பயிற்சி செய்பவர்கள், நீண்ட நேரம் பயிற்சி செய்பவர்கள் அல்லது கடினமாக பயிற்சி செய்பவர்கள் தசைகளை 

அதிகப் படியான உழைப்புக்கு உள்ளாக்கும் அபாயம் உள்ளது” உடற்பயிற்சி நேரம் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்லக்கூடாது. 

பயிற்சிக்கு உட்படுத்தும் முன் தசைகளுக்கும் அவகாசம் இருக்க வேண்டும். எனவே வார்ம் அப் முக்கியம்.
உங்களால் 5 கிலோவை எளிதாகத் தூக்க முடிந்தால் 15 கிலோவை முயற்சிக்க தோன்றும். புத்திசாலிகள் தங்கள் பயிற்சியின் தீவிரத்தை படிப்படியாக உயர்த்துவார்கள். 

இது அதிக பலன் தரும் என்பதோடு மருத்துவரை தேடிச்செல்லும் நிலை வராது. நீங்கள் நடைப்பயிற்சி செய்தால், 
அதிக உடற்பயிற்சி

உங்கள் வழக்கமான சுற்றை எளிதாக செய்ய முடிந்த பிறகே வேகத்தை கூட்டவும்.

படிப்படியான சீரான பயிற்சி தசை வலுப்பட மிகவும் ஏற்றது.

உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்க வேண்டாம்.

சிறந்த ஒர்க் அவுட்டா அல்லது மருத்துவ மனைக்கு செல்லும் வழியா என்பதை பயிற்சியின் நுட்பம் தீர்மானிக்கலாம். 

எடை தூக்கும் போது அதை ஆட்டுவது அல்லது பயிற்சிக்கு நடுவே உங்கள் முதுகை வளைப்பது போன்ற சிறிய தவறுகள் காயமடையும் வாய்ப்பை அதிகமாக்கும்.
வயிறு, தொடையை பிரச்சனைக் குரிய பகுதி என நினைத்து அவற்றிலேயே கவனம் செலுத்த வேண்டாம். உடலின் ஒரு பகுதியை மட்டும் உங்களால் சீராக்க முடியாது. 

அப்படி முடிந்தால் அது நன்றாகவும் இருக்காது. எல்லா தசைகளு க்கும் ஏற்ற பயிற்சியை தேர்வு செய்து பின்பற்றவும். உங்கள் உடல் எச்சரிக்கை மணி எழுப்பும் போது அதை கவனிக்கத் தவறக் கூடாது.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings