சீனாவில் நபர் ஒருவர் கொரோனா வைரஸை மற்றவர் களுக்கு பரப்பும் நோக்கத்தோடு செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்த அதிர் வலையை ஏற்படுத்தி யுள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து,
ஆஸ்திரேலியா, நேபாளம், வியட்நாம், ஹாங்காங், மக்காவு, மலேசியா, கனடா, கம்போடியா, இலங்கை, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவர்கள், நிபுணர்கள் போராடி வரும் நிலையில், எச்.ஐ.வி-க்கு பயன் படுத்தப்படும் மாத்திரைகளை பயன்படுத்துவ தாக சீனா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனினும், தற்போது வரை நோயை முழுமையாக கட்டுப் படுத்தும் மருந்து கண்டறியப்பட வில்லை.
சீனாவில் நோயால் பாதிக்கப் பட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் மற்றவர் களுக்கு அதை பரப்பும் நோக்கத்தோடு செயல்பட்டது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
குறித்த வீடியோவில், உணவை வாடிக்கை யாளரிடம் வழங்க லிப்டில் செல்லும் டெலிவரி மேன், அதில் எச்சில் துப்புகிறார். இச்சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை.
Delivery man spits into food, comrades...be vigilant against evil #coronarvirus#coronavirus #coronavirus #coronaphobia #coronovirusoutbreak #CoronavirusOutbreak #CoronaVirusCanadapic.twitter.com/iyiusOyHtG— Harry Chen PhD (@IsChinar) January 28, 2020