பொங்கல் போனஸ் எவ்வளவு? - அரசு அரசாணை வெளியீடு !

பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் ஒருவார காலமே இருக்கிறது. வரும் 15ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள், 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 17ஆம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப் படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
பொங்கல் போனஸ்


ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர் களுக்கும்,

ஓய்வூதிய தாரர்களு க்கும், குடும்ப ஓய்வூதியர் களுக்கும் போனஸ் வழங்கப் படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டிற் கான பொங்கல் போனஸ் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர் களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர் களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும்.

'சி' மற்றும் 'டி' பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர் களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


முன்னதாக 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அரசு ஊழியர் களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 

மேலும் போனஸ் தொகை 30 நாட்கள் சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

முழு விவரம் இதோ:

Tags:
Privacy and cookie settings