குடியுரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்திவிட்டு தான் ஓய்வெடுப்பேன் !

0
குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து எதிர்க் கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. 
அமித்ஷா


பாஜக இந்தச் சட்டத்தை அமல்படுத்திய பின்னரும் இதற்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜல்பூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அப்போது அவர், “மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த ஆறு சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர் களுக்குக் குடியுரிமை வழங்கிய பின்னரே பாஜக அரசு ஓய்வெடுக்கும்” என்று பேசினார்.

மேலும் அவர், “பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மை யினரும் இந்நாட்டின் மகன்கள், மகள்கள். நீங்களும் நானும் நாடு முழுவதும் அதே உரிமையை அனுபவிக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் களையும் தாக்கிப் பேசினார். “காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வில்லை என்றால், எஞ்சி யிருக்கும் கட்சியும் அழிக்கப்படும். 


அவர்கள் தேசத்தின் துடிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்,

மக்கள் என்ன விரும்புகி றார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மாறாக, அவர்கள் தங்கள் வாக்கு வங்கிக்கு அஞ்சுகிறார்கள்.

பல பத்தாண்டுக ளாக பாகிஸ்தான், வங்க தேசத்தில் சிறுபான்மை யினர் எண்ணிக்கையில் வீழ்ச்சி யடைந்து வருகின்றனர். 
காங்கிரஸின் காது கேளாத மற்றும் பார்வையற்ற தலைவர்களிடம் இதுபற்றி நான் கேட்க விரும்புகிறேன். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தி விட்டு தான் நான் ஓய்வெடுப்பேன்” என்று கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings