சுலைமானி இருந்திருந்தால்... அரசுக்கு எதிராக போராடும் ஈரான் மக்கள் !

0
ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதால், தற்போது ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களே போராட்டம் செய்து வருகிறார்கள்.
சுலைமானி இருந்திருந்தால்
உக்ரைன் விமானம் விபத்து உலகம் மொத்தத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் இது விமான விபத்து கிடையாது, ஏவுகணை தாக்குதல். 

ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக் குள்ளானது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும். விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள்.

ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டது தான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு இருக்கிறது.
நேற்று காலை தான் ஈரான் இந்த தாக்குதலை ஒப்புக் கொண்டது.

ஈரான் மக்கள்

இந்த விமான தாக்குதலில் ஈரான் மக்கள்தான் அதிகம் பலியானார்கள். இதில் 87 ஈரான் மக்கள் பலியானார்கள். 63 கனடா மக்கள் பலியானார்கள். 

11 உக்ரைன் மக்கள் பலியானார்கள். இதில் ஈரான் தங்கள் சொந்த நாட்டு மக்களையும் கொன்று குவித்துள்ளது.

அரசு எப்படி

இதனால் தற்போது ஈரான் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய தொடங்கி யுள்ளனர். 
ஈரான் தலைமை தலைவர் அலி கமானி, அதிபர் ஹசன் ரவுஹானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 176 அப்பாவி மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்.

அமெரிக்கா எப்படி

அமெரிக்காவை விட நீங்கள் கொடுமை யானவர்கள் என்று கூறி இவர்கள் போராடி வருகிறார்கள். 

ஈரானில் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள் என்று இல்லாமல் பல்வேறு மக்கள் இங்கு மொத்தமாக கூறி போராட்டம் செய்து வருகிறார்கள்.
இன்னும் சிலர்

இன்னும் சிலர் நீங்கள் அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தால் அதை ஒழுங்காக செய்ய வேண்டியது தானே. ஏன் இப்படி தவறாக செய்துள்ளீர்கள். 
சுலைமானி இருந்திருந்தால்... அரசுக்கு எதிராக போராடும் ஈரான் மக்கள் !
பயணிகள் விமானம் பறப்பதை நிறுத்தி விட்டு, அதன்பின் தாக்குதல் நடத்தி இருக்கலாமே. ஏன் இப்படி அவசரப்பட்டு ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தி இருந்தீர்கள்.

சுலைமானி எப்படி

சுலைமானி இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது. அவர் இருந்திருந்தால் கட்சிதமாக செயல்களை செய்திருப்பார்கள். 

தற்போது இருக்கும் ராணுவ அதிகாரி களுக்கோ, அதிபருக்கும் இதற்கான பலம், அறிவு இல்லை என்று போராடும் மக்கள் கூறி யுள்ளனர்.

அரசு ஆதரவு
ஈரானில் மக்கள் இப்படி போராட்டம் செய்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். 

அங்கு மக்கள் போராட்டத்தை அரசு மதிக்க வேண்டும்.ஒழுங்காக அவர்களின் கோரிக்கை மக்கள் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings