சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீர் வீழ்ச்சியா...? அல்லது மேகங்களா...? என்பதே குழப்பத்திற்கு காரணம்.
இயற்கை எப்போதும் ஆச்சரியத்தை தரக்கூடிய ஒன்று. பரந்து விரிந்த கடல்கள்,
விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் கொடைகளில் ஆயிரக் கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் கொடைகளில் ஆயிரக் கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
பார்க்கப் பார்க்க வியப்பு விலகாத இயற்கை சில நேரங்களில் சவால் களையும் அளிக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் உள்ள மலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அந்த சவால். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மிசோரம் முழுவதுமே மலைப் பாங்கான பகுதிதான்.
நீர் வீழ்ச்சிகள், மலைச்சரிவு, குளிர் என்று மலைப் பிரதேசத்திற்கே உண்டான எல்லா அம்சங்களும் அங்கே உள்ளது.
அம்மாநிலத்தில் மலை உச்சியொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீர் வீழ்ச்சி போல தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற புகைப்படமே அது. இந்த காட்சியின் வீடியோவை நீங்கள் பார்த்தாலும், அப்படியே நம்பி விடுவீர்கள்.
ஆனால், இயற்கை அங்கேதான் தனது ஆச்சரியத்தை ஒளித்து வைத்துள்ளது. மேகங்கள் மலைகளின் வழியே கீழே இறங்குவதன் காட்சி தான் அது.
பார்த்த உடன் நீர் வீழ்ச்சி என்று நினைக்க வைக்கும் வகையில் மேகங்கள் லாவகமாக கீழே இறங்குகின்றன.
பார்க்கப் பார்க்க வியப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Thanks for Your Comments