ஜனவரி 22 -ல் என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் - நிர்பயா தாய் !

0
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை 6 கூட்டு வன்கொடுமை செய்து விட்டு சாலையில் தூக்கி எறிந்த சென்ற சம்பவம் இன்று வரை சோக அலையயை ஏற்படுத்தி வருகிறது. 
நிர்பயா தாய்


இந்த கோரா சம்பவத்திற்கு பிறகு அம்மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கைதாகி குற்றம் நிரூபிக்கப் பட்ட 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் அவர் சிறார் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை யானார். 

எஞ்சியிருந்த நான்கு குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதை யடுத்து நான்கு பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கிட்டு தண்டனை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். 
அதை நிராகரித்த நீதிமன்றம் அவர்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. 

இந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உடனடி யாக நிறைவேற்றக் கோரி நிர்பயாவின் பெற்றோர், டெல்லி அரசின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை விசாரித்த நீதிமன்றம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7மணிக்குத் தூக்கிலிட வேண்டும் என உத்தர விட்டுள்ளது. 


இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகள் வினய் குமார் ஷர்மா, முகேஷ் சிங் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்தனர்.

அதை 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.

மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கடந்த 7 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கும் நிர்பயா தாய் ஆஷா தேவி இன்று செய்தி யாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் ' இது எனக்கு ஒரு மிக பெரிய நாள். என மக்களின் ஆன்மா சாந்தியடைய 7 வருடங்களாக போராடி வருகின்றேன். 
ஆனால் ஜனவரி 22 ( குற்றவாளி களை தூக்கிலிடும் நாள் ) இதை விட பெரிய நாளாக இருக்கும் என கருதுகிறேன் என கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings