விஷம் சாப்பிட்டு விட்டேன் எப்படியாவது காப்பாத்து கெஞ்சிய கணவர் !

1 minute read
0
"விஷ மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. நான் செத்துடுவேன் போல இருக்கு.. என்னை எப்படியாவது காப்பாத்தும்மா" என்று மனைவியிடம் கெஞ்சிய போதை கணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
எப்படியாவது காப்பாத்து கெஞ்சிய கணவர்


மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதி திக்குறிச்சி வாளைவிளை. இங்கு வசித்து வருபவர் ராஜேந்திரன்.. 55 வயதாகிறது.. 

ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.. நிர்மலா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேருமே வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள்.

ராஜேந்திரன் தினமும் தண்ணி அடிப்பவராம்.. அப்படி தண்ணி அடித்து விட்டால், வீட்டில் நிர்மலாவிடம் சண்டை போடாமல் இருக்கவே மாட்டாராம். 

ஒவ்வொரு முறை சண்டை போடும் போதெல்லாம், "உன்கூட இருப்பதை விட, சாகறதே மேல்" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பாராம். விடிந்ததும்.. போதை தெளிந்து சண்டையையும் மறந்து விடுவாராம்.

இப்படித் தான், நேற்று மதியமே ராஜேந்திரன் ஃபுல் போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்குள் போனவர், திடீரென "நான் போதையில் விஷ மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. 

செத்து விடுவேன் போல் இருக்கு.. என்னை எப்படியாவது காப்பாத்தும்மா" என்று சொல்லி கொண்டே மயங்கி விழுந்து விட்டார்.


இதனால் பதறி போன நிர்மலா, கணவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு சென்றார்... 

பிறகு மேல் சிகிச்சைக் காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜேந்திரன் என்ன மாத்திரை சாப்பிட்டார், ஏன் சாப்பிட்டார், என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

போதையில் விஷ மாத்திரை சாப்பிட்டு, கடைசி நேரத்தில் காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சிய கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, November 2025
Privacy and cookie settings