சென்ட்ரல் ரயில் நிலையத்தி லிருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை 15 மணி நேரத்தில் மீட்கபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட நிலையில்,
ரயிலில் பிச்சை எடுக்க வைப்பதற்காக குழந்தையை கடத்திச் சென்றதாக கைது செய்யப் பட்டவர் வாக்கு மூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்சினா என்பவர் மஷிதா (6), ரஷிதா (2) ஆகிய தனது இரு மகள்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது 2 வயது குழந்தை ரஷிதாவை காணாததால் அதிர்ச்சி யடைந்த மர்சினா, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படை யில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்களுடன் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் மண்டல் என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதை யடுத்து அவரது புகைப் படத்தை அனைத்து ரயில் நிலையங் களுக்கும் அனுப்பி வைத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மும்பையி லிருந்து நாகர்கோவில் சென்ற விரைவு ரயிலில் குழந்தையுடன் தீபக் மண்டல் பிச்சை எடுத்துள்ளார். அப்போது குழந்தையை வைத்து பிச்சை எடுத்த தீபக்குடன் சக பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு வாதத்தை தொடர்ந்து அந்த பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், குழந்தையையும், தீபக் மண்டலையும் திண்டுக்கல் அடுத்த பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் செண்ட்ரல் ரயில் நிலையத்தி லிருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
இதை யடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்ட குழந்தை, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தி லிருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை 15 மணி நேரத்தில் மீட்கபட்டு பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்ட வழக்கில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு
பாராட்டுகள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, பிச்சை எடுக்க வைப்பதற் காக குழந்தையை கடத்திச் சென்றதாக தீபக் மண்டல் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments