பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் லீவு தெரியுமா?

0
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் முதலாவதாக இருக்கின்றது பொங்கல் பண்டிகை. இந்தாண்டு 2020 பொங்கல் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகின்றது. 
எந்த கிழமைகளில் வருகின்றது, எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கின்றது உள்ளிட்ட விபரங்களை இங்கு பார்ப்போம்...

பொங்கல் பண்டிகை என்றால் மூன்று விதமாக பொங்கல் நாட்கள் கொண்டாடப்படுவது விசேஷமானது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகின்றது.

இன்றைய தினம் சபரி மலையில் மகர ஜோதி என்ற உன்னத நிகழ்வு நடக்கும்.

அதற்கும் முன் தினம் (மார்கழி 29) பழையன வற்றைக் கழித்து புதியன வற்றைப் புகுத்தும் பொருட்டு போகி பண்டிகை கொண்டாடப் படுகின்றது.

பொங்கலுக்கு மறுநாள் அதாவது தை 2ஆம் தேதி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் கொண்டாடப் படுகின்றது.

அடுத்த நாள் உழவர் திருநாளாக அதாவது காணும் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது.
தேதி வாரியாக

தேதிகிழமைபண்டிகை
ஜனவரி 14 (மார்கழி 29)செவ்வாய்க் கிழமைபோகிப் பண்டிகை
ஜனவரி 15 (தை 1)புதன் கிழமைதை பொங்கல்
ஜனவரி 16 (தை 2)வியாழக்கிழமைமாட்டுப் பொங்கல்
ஜனவரி 17 (தை 3)வெள்ளிக் கிழமைஉழவர் திருநாள், காணும் பொங்கல்
ஜனவரி 18சனிக்கிழமைவார விடுமுறை
ஜனவரி 19ஞாயிறு கிழமைவார விடுமுறை
பள்ளி, அலுவலகத்திற்கு செல்வோருக்கு மகிழ்ச்சி

இந்தாண்டு 2020ல் பொங்கல் பண்டிகை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என வார நாட்களில் வந்துள்ள தால் கூடுதல் விடுமுறை கிடைக்கின்றது. 

அதோடு சனி, ஞாயிறு என அடுத்தடுத்து வார விடுமுறை நாட்கள் வர இருப்பதால் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை வருகின்றது.

இதன் காரணமாக இந்த விடுமுறை நாட்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள இன்றே திட்டமிடுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings