கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கே.என்.தொட்டி என்கிற காட்டி நாயக்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசாரதி.
இவரின் மகள் சந்தியாராணி (21), அங்குள்ள கல்லூரியில் பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் காட்டி நாயக்கன் தொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சந்தியாராணி களமிறங்கினார்.
அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ``தன் பெயரில் ரூ.77,000 அசையும் சொத்துகள் இருப்பதாக வும் தன் தந்தையின் பெயரில் ரூ.75,32,000 மதிப்பு சொத்துகள் இருக்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மக்களின் ஆதரவுடன் போட்டியிட்ட மாணவி சந்தியாராணி வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவர், மொத்தம் 1,160 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த மாணவியை எதிர்த்துப் போட்டியிட்ட நபர் 950 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை விடவும் 210 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று மாணவி மகுடம் சூட்டியுள்ளார்.
இவரின் வெற்றியை காட்டி நாயக்கன் தொட்டி கிராம மக்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய மாணவி சந்தியாராணி, ``எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பேசுவதற்கே வார்த்தை வரவில்லை. அவ்வளவு சந்தோஷத்தில் உள்ளேன்.
பேசுவதற்கே வார்த்தை வரவில்லை. அவ்வளவு சந்தோஷத்தில் உள்ளேன்.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் உண்மையாகக் கடமையைச் செய்வேன். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன்.
இப்போது, பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரி படிப்பை முடிக்க இன்னும் 6 மாதங்கள் உள்ளன.
அதன் பிறகு, எம்.பி.ஏ முதுநிலை படிப்பை தொலைதூர கல்வியின் மூலம் கற்க உள்ளேன். எனக்கு அரசியல் ஆசை சிறு வயதிலிருந்தே அதிகம். மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன்’ என்றார் வெற்றிக் களிப்பில்.
Thanks for Your Comments