கீழ்ப்பக்க முதுகுவலி குறைய உடற்பயிற்சி !

இன்றைய திகதியில் நாளாந்தம் 80 கிலோ மீற்றர் தொலைவிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்து, அலுவலகத்திற்கு சென்று, 8 மணி நேரம் பணியாற்றி விட்டு, மீண்டும் இல்லம் திரும்புபவர்கள் அதிகம். 
கீழ்ப்பக்க முதுகுவலி குறைய


இவர்களில் பெரும் பாலானவர்கள் கீழ்ப்பக்க முதுகு வலிக்கு ஆளாகுவார்கள்.

இவர்களில் பலருக்கு மருத்துவ பரிசோதனை யில் disc prolapse எனப்படும் தண்டுவடப் பகுதியில் l4, l5 ஆகிய தண்டுவடத்தில் ஏற்படும் நரம்பு அழுத்தம் காரணமாக வலி ஏற்படுகிறது என்பது தெரிய வரும். 
இத்தகைய வலி முதுகில் தொடங்கி கணுக்கால் வரையிலும் நீடித்திருக்கும். பலர் வலியால் துடிப்பர். இதன் போது இவர்களின் உடனடி தெரிவு வலி நிவாரணி மாத்திரைகளே. 

ஆனால் மருத்துவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், பிஸியோதெரபி எனப்படும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைப்பர்.

இந்நிலையில் இயன்முறை மருத்துவர்கள் எம்முடைய இல்லத்திற்கு வருகை தந்து, பயிற்சிகளை செய்ய வலியுறுத்து வார்கள். 

அந்த வகையில் நான்கு மணித்தியால த்திற்கு ஒரு முறை குப்புற கவிழ்ந்து படுக்க வேண்டும் என்றும், அந்த நிலையில் 15 முதல் 20 நிமிடம் படுத்துறங்க வேண்டும் என்றும் முதல் பயிற்சியாக எடுத்துரைப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து குப்புற கவிழ்ந்த நிலையில் படுத்துக் கொண்டே, நெஞ்சக பகுதியில் இரண்டு தலையணைகள் வைத்து உறங்க வேண்டும் என்று எடுத்துரைப் பார்கள். 

இந்தப் பயிற்சி காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். இந்த பயிற்சியின் கால அளவும் 15 நிமிடத்தில் 20 நிமிடங்களே. 

இதனைத் தொடர்ந்து குப்புற கவிழ்ந்து படுத்திருக்கும் நிலையில், உங்களது வலது மற்றும் இடது கைகளை தரையுடன் அல்லது படுக்கை யுடன் நன்றாக அழுந்தி இருக்கு மாறு வைத்துக் கொண்டு, 


உங்களது மார்பு பகுதியை மட்டும் எந்த அளவுக்கு தரையி லிருந்து அல்லது படுக்கை யிலிருந்து தூக்க இயலுமோ அந்த அளவிற்கு தூக்க வேண்டும்.

மூன்று வினாடிகள் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும். இந்த மூன்றும் பயிற்சி களையும் செய்து வந்தால், உங்களது கணுக்கால் பகுதியில் இருந்த வலி அனைத்தும் தண்டுவடப் பகுதியில் நிலைபெறும். 
அதாவது வலி ஒரு மையப் பகுதிக்குள் குவிந்து விடும். அதன் பிறகு வலி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். 

இதன் பிறகும் கட்டாய ஓய்வும், இயன் முறை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சியையும் தொடர்ந்தால், முதுகு வலி குறைய தொடங்கும்.
Tags:
Privacy and cookie settings