கின்னஸில் இடம் பெற்ற மிக குள்ளமான மனிதர் உயிரிழந்தார் !

0 minute read
0
உலகில் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற நேபாள நாட்டை சேர்ந்த ககேந்திர தாபா மாகர் உயிரிழந்தார்.
குள்ளமான மனிதர்


27 வயதான ககேந்திர தாபா மாகர் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் வசித்து வந்தார்.
சில நாட்களாக நிமோனியா காய்யச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
காத்மாண்டு


நேபாள் தலைநகர் காத்மாண்டு வில் 1992ம் ஆண்டு பிறந்த ககேந்திர தாபா மாகர், வெறும் 2 அடி மட்டுமே உயரம் கொண்டவர்
ககேந்திர தாபா மாகர்
உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என கடந்த 2011ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 15, November 2025
Privacy and cookie settings