பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.
முஷாரப் அதிபராக இருந்த போது 2007-ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது 2013-ஆம் ஆண்டு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு நடந்து கொண்டிருந்த போதே 2016-ல் துபாய் சென்ற முஷாரப் பாகிஸ்தான் திரும்ப வில்லை.
கடந்த டிசம்பர் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பிற்கு தூக்கு தண்டனை அறிவித்தது.
இதற்கு எதிரான மறுசீராய்வு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம், முஷாரப் மீதான வழக்கு அரசியலமை ப்பிற்கு எதிரான என கூறி தண்டனையை ரத்து செய்தது.
Thanks for Your Comments