திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த சுப்பிர மணியன் என்பவரின் ம்னைவி புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கின்றார்.
அந்த மனுவில், 'சுப்பிரமணியன் என்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டார்' என்றும்,
பெற்றோர் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்த பின்னர் வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார் என்றும் தெரிவித்து இருந்தார்.
பெற்றோர் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்த பின்னர் வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த சுப்பிர மணியனைக் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த மகளிர் நீதிமன்றம் சுப்பிர மணியனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தண்டனை வழங்கியது.
இதனை தொடர்ந்து மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இது குறித்த வழக்கு விசாரணையின் பொழுது சுப்பிர மணியனும் அவரது மனைவியும் 18 வயதுக்கு பிறகே உறவு வைத்து இருந்தது நிரூபிக்கப் பட்டது.
இதன் காரணமாக, சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்வதாக அந்த மனுவிற்கு தீர்ப்பளித்தது.
தொடர்ந்து, சுப்பிர மணியனின் மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
Thanks for Your Comments