முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
துக்ளக் பத்திரிக்கை யின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
தமிழகம் முழுவதிலு மிருந்து வந்த துக்ளக் வாசகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த பத்திரிக்கை யாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?
இந்நிகழ்ச்சி யில் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து சோ ராமசாமியை புகழ்ந்து பேசினார்.
இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லி விடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.
இப்போது நியூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்து விடுகிறார்கள். பொய்யை உண்மையாக்கா தீர்கள். சோ ராமசாமி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்.
தற்போதைய காலத்தில் சோ ராமசாமி போன்ற பத்திரிகை யாளர்கள் தேவை.
பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.சோ என்றால் துக்ளக்.
பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.சோ என்றால் துக்ளக்.
துக்ளக் என்றால் சோ. துக்ளக் பத்திரிக்கையை குருமூர்த்தி ஒரிஜினாலிட்டி யுடன் நடத்தி வருகிறார்.
சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பது படித்து வருவதல்ல பிறந்து வருவது.
சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பது படித்து வருவதல்ல பிறந்து வருவது.
சோவை பெரியாளாக ஆக்கியவர்கள் அவரை எதிர்த்த கருணாநிதி மற்றும் பக்தவச்சலம். தமிழகத்திற்கு மட்டும் தெரிந்த சோவை இந்தியா முழுக்க பிரபலப் படுத்தியது இந்திரா காந்தி.
ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்க வேண்டுமா?
அவர் அவசரநிலை கொண்டு வந்த காலத்தில் துக்ளக் பத்திரிகையில் கருப்பு அட்டைப் படத்தைப் போட்டது அவரை, இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.
கவலைகள் அன்றாடம் வரும் அதை நிரந்தரமாக்கி கொள்வதும் தற்காலிக மாக கொள்வதும் உங்கள் கையில் தான் உள்ளது.
கவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமான தாக ஆக்கிக் கொண்டால் நீ அறிவாளி. கவலைகளை எல்லாம் தற்காலிகமான தாக ஆக்கிக் கொண்டவர் சோ ராமசாமி.
இன்றைய காலகட்டத்தில் சோ போன்ற பத்திரிக்கையாளர் மிக மிக அவசியம்’ என்றார்.
Thanks for Your Comments