அகமதாபாத்தில் ஆஸ்ரமம் நடத்தி நன்கொடை வசூலிக்க பெண்களை பயன்படுத்தி வந்த நித்யானந்தா தற்போது தனக்கென்று ஒரு தீவு வாங்கி,
அதற்கு 'கைலாஸ்' என்று பெயரிட்டு, தனிக் கொடி அமைத்து, சட்டம் மற்றும் முத்திரை உருவாக்கி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
திணறும் காவல் துறை
நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று அகமதாபாத் காவல் துறை திணறி வரும் நிலையில் தனக்கென்று கைலாஸ் என்ற பெயரில் ஒரு நாட்டை அமைத்து சட்டத்தை இயற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
தனி இணையதளம்
இந்த செய்தி தற்போது இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது நாட்டுக்கு என்று தனி இணைய த்தையும் உருவாக்கி இருக்கிறார். அதில், தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்து இறையாண்மை நாடு
'இந்து இறையாண்மை நாடு' என்று அந்த கைலாஸ் நாட்டுக்கு பெயரிட்டு அமைச்சரவை யையும் ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நாட்டுக்கு பிரதமரும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.
குடியுரிமை
தனது இணைய தளங்கள் மூலம் நன்கொடையும் கோரி வருகிறார். அவரது நாடான 'கிரேட்டஸ்ட் இந்து நேஷன்' நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமையும் வழங்கப் படுகிறது.
பனாமாவில் தனது இணைய தளத்தை பதிவு செய்து இருக்கிறார். இதன் ஐபி அடையாளம் அமெரிக்காவின் டல்லாஸ் என்று காட்டுகிறது.
இந்துக்களுக்கு அடைக்கலம்
குறிப்பாக எந்த இடத்தில் 'கைலாஸ்' அமைத்து இருக்கிறார் என்பது குறித்து இணயத்தில் பதிவு செய்யப்பட வில்லை. ஆனால், நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்ட இந்துக் களுக்கு 'கைலாஸ்' ஒரு அடைக்கலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜாதி தேவையில்லை
அந்த இணையத்தில், ''அமெரிக்காவில் கைலாஸ் அமைக்கப் பட்டுள்ளது. இந்து ஆதி சைவ சமுதாயத்தினரின் தலைமையில் அமைக்கப் பட்டது.
உலக அளவில் ஆண், பெண் பேதமின்றி, ஜாதி பாகுபாடு இன்றி, ஆசைகள் இல்லாதவர் களுக்கு, அமைதியை நாடுபவர் களுக்கு கைலாசத்தில் இடம் உண்டு. இங்கு அமைதியான வாழ்க்கையை நடத்தலாம்.
இந்துக்கள் அனைவரும், கலை, பண்பாட்டு, ஆன்மீகத்துடன் இணைந்து வாழலாம். எந்த வன்முறையும் இருக்காது'' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தனிக் கொடி
'கைலாஸ்' தேசத்திற்கு என்று தனிக் கொடி இருக்கிறது. 'ரிஷப துவஜா' என்று பெயரிடப் பட்டுள்ளது. அந்தக் கொடியில் நித்யானந்தா, கடவுள் சிவனின் வாகனமான நந்தி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தனி கல்வித் துறை, கருவூலம்
கைலாஸ்' தேசத்திற்கு என்று தனி கல்வித்துறை, தனி கருவூலம், வர்த்தகம் என்று அனைத்து துறைகளும் உள்ளன. பண்பாட்டுத் துறை உள்ளது. இந்து சனாதன தர்மத்தை காப்பாற்றும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
'தார்மீக பொருளாதாரம் என்று தனித் துறை உள்ளது. ரிசர்வ் வங்கியும் உண்டு. கிரிப்டோ கரன்சியும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
பாஸ்போர்ட் தேவை
இந்த 'கைலாஸ்' தேசத்திற்கு வர வேண்டும் என்றால் பாஸ்போர்ட் தேவை. பரமசிவனின் அருளால் மட்டுமே இந்த பாஸ்போர்ட் கிடைக்கும்.
அப்படி பாஸ்போர்ட் பெறுபவர்கள் 'கைலாஸ்' உள்பட 14 உலகங்களு க்கும் இலவசமாக சென்று வரலாம் என்று இணையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈகுவேடாரா, பனாமாவா?
தென் அமெரிக்காவில் இருக்கும் ஈகுவேடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு நாட்டை நித்யானந்தா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், பனாமாவில் இருக்கும் தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் அவரது நண்பர்கள் மூலம் இந்தத் தீவை அவர் வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகி யுள்ளது.
ஐநா அனுமதி தேவை
தனி நாட்டை அறிவிக்க ஐநாவின் அனுமதி வேண்டும். அதற்கான வேலைகளையும் ஏற்கனவே நித்யானந்தா துவங்கி விட்டாதாக கூறப்படு கிறது. இதற்கு ஐநாவில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடுகள் அனுமதிக்க வேண்டும்.
தீவு வாங்கலாமா?
இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் தீவு வாங்கலாமா என்றால் வாங்கலாம். ஆனால் வரி அதிகமாக இருக்கும். இதற்கு பெமா சட்டம் அனுமதி வழங்குகிறது.
நித்யானந்தா மீது புகார்
தமிழகத்தைச் சேர்ந்த தம்பதிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருந்தனர்.
தங்களது இரண்டு மகள் களையும் நித்யானந்தா கடத்தி வைத்து இருப்பதாகவும், மீட்டுத் தரவேண்டும் என்று கேட்டு இருந்தனர்.
இந்தப் பெண்கள் இருவரும் அகமதாபாத் ஆஸ்ரமத்தில் இருந்தனர். இவர்களும் நித்யானந்தா வுடன் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வெளிநாட்டுக்கு தப்பியது எப்போது?
தமிழகத்தின் தம்பதிகள் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் காவல் துறை நித்யானந்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
அவர் வெளிநாட்டிற்கு 2018இல் தப்பித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் நித்யானந்தா இருந்தார்.
இவரது பாஸ்போர்ட்டும் காலாவதி ஆகியுள்ளது. அப்படி இருக்கும் போது எவ்வாறு வெளி நாட்டிற்கு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது.
#Kailaasa is a nation without borders created by dispossessed Hindus from around the #world who lost the right to practice #Hinduism authentically in their own countries. @RulesElsa @narendramodi @MeenaDasNarayan @Payal_Rohatgi @News18TamilNadu @CBSNews https://t.co/VOXtstH66T https://t.co/C9y0Wt4z2y— Nithya Deepikananda Swami (@NithyaDeepikan1) December 4, 2019