குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற் காக நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறு மாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில்,
சென்னை ஐஐடி-யில் படித்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டன்தால் பங்கேற்றார்.
சென்னை ஐஐடி-யில் படித்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டன்தால் பங்கேற்றார்.
இதை அடுத்து, அவர் இந்திய இறை யாண்மைக்கு எதிராகவும், விசா விதிமுறை களை மீறி செயல் பட்டதாகவும் கூறி,
இந்தியாவில் தங்கி படிப்பதற் கான அனுமதியை குடியுரிமை துறை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறப் பட்டார்.
இதே போன்று தற்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா மாநிலம் கொச்சியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு,
புகைப் படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நார்வேயை சேர்ந்த ஜேன்-மெட் ஜொஹன்சன் என்னும் பெண்ணை,
நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
இது குறித்து ஜொஹன்சன் கூறுகையில், ”இன்று 6 மணிக்குள் நாட்டை விட்டு வெளியேற வில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்க வுள்ளதாக குடியேற்ற அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எழுத்து பூர்வமாக தருமாறு கேட்டேன், அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்” என தெரிவித் துள்ளார்.
Thanks for Your Comments