தேர்தலின் போது ஐசியூவில் அட்மிட்டான அதிகாரிகள் - கனிமொழி !

0
தமிழகமும் அதன் அதிகாரிகளும் ஐசியுவில் இருக்கிறார்கள் என்றும் தமிழகத்திற்கு வழிபிறக்கக் கூடிய பொங்கலாக இந்த பொங்கல் அமையும் என்றும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஐசியூவில் அட்மிட்டான அதிகாரிகள்


தமிழ்ப் புத்தாண்டு, தை முதல் நாளை யொட்டி வாசோ வாட்டர் சிஸ்டம்ஸ் சார்பில் 2000 ஏழைகளுக்கு புத்தாடை மற்றும்

அரிசி, கரும்பு உள்ளிட்டவை வழங்கும் விழா சென்னை மாம்பாலத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பியும் மகளிர் அணி தலைவருமான கனிமொழி கலந்து கொண்டார்.

கொண்டாட்டம்

அந்த விழாவில் நலத்திட்டங் களை வழங்கிவிட்டு கனிமொழி பேசுகையில் கருணாநிதி முதல்வராக இருந்த போது 
பல தமிழறிஞர் களின் கோரிக்கைக்கு இணங்க பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப் பட்டு வருகிறது.

அறிவிப்பு

ஆனால் தமிழ் இனத்திற்கும் திராவிட கொள்கை களுக்கும் எதிராக இருக்கக் கூடிய பாஜகவின் பேச்சை கேட்டுக் கொண்டு தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் கருணாநிதி யின் அறிவிப்பை மறைக்கக் கூடிய விதமாக செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதா

இவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் ஆட்சி நடத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை யில்லை. 

இந்த அதிமுக ஆட்சி பாஜகவின் ஆட்சி, மோடியின் ஆட்சி. மத்திய அமைச்சர் அமித்ஷா என்ன சொல்கிறார்களோ அதை ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்துகி றார்களே தவிர சுயமாக எதையும் சிந்திப்பது கிடையாது.


பொங்கல்

திராவிட உணர்வுகளையும் தமிழ் உணர்வு களையும் புரிந்து கொண்டு நடத்தக் கூடிய ஆட்சி இது இல்லை என்பது அத்தனை பேருக்கும் தெரியும். 

பொங்கல் அன்றும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப் படுத்திய சூழல் இங்கு நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல்

பின்னர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவோம் என அறிக்கை விட்டவுடன் டிவியில்லாத மாணவர்கள் மட்டும் விருப்பப் பட்டால் பள்ளிக்கு வரலாம் என சால்ஜாப்பு சொன்னது அதிமுக அரசு. 
இந்த அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராகி விட்டதற்கான சாட்சிதான் உள்ளாட்சித் தேர்தல்.

மனப்பக்குவம்
கனிமொழி


தேர்தல் முடிவுகள் வரும் போது அதிமுகவினர் குழப்பங்கள், அதிகார துஷ்பிரயோகங் களையும் தாண்டி நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். 

ஆனாலும் அந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இல்லாமல் அதிகாரிகளை எல்லாம் மிரட்டினர்.

அரசாங்கம்

தலைமை பதவிக்கு வரக் கூடிய பகுதிகளில் எல்லாம் அதிகாரிகள் உடல் நிலை சரியில்லை என தேர்தல் நடத்த வரவில்லை.
கோவில் பட்டியில் உள்ள தேர்தல் அதிகாரியோ ஐசியுவில் அட்மிட் ஆக கூடிய சூழல் உருவானது. இந்த அரசாங்கமே ஐசியுவில் இருக்கக் கூடிய அரசாங்கம் தான். 

தமிழ் புத்தாண்டான இந்த பொங்கல் நன்னாளில் தமிழகத்திற்கு ஒரு வழி பிறக்கும் என்றார் கனிமொழி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings