குரங்கின் சேட்டைகளை தடுக்க கரடி உடை அணிந்த மக்கள் !

வனவிலங்கான குரங்கின் சேட்டைகள் பற்றி அனைவரும் அறிந்ததே. குரங்குகள் அதிக எண்ணிக்கை யில் காணப்படும்
குரங்கின் சேட்டைகளை தடுக்க கரடி உடை அணிந்த மக்கள்


வனப்பகுதிகளின் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் அவைகளின் குறும்புத் தனத்தினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

பொதுவாக குடியிருப்பு பகுதிகளில் நுழையும் குரங்குகள் வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை திண்பது,

பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் அறிந்திருப்போம். 

குரங்குகள் விளை பயிர்களையும் சேதப்படுத்தக் கூடியவை. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில், குரங்குகளை பயமுறுத்தி விரட்ட கரடி உருவத்தைப் போன்று உடை அணிந்து அக்கிராம மக்கள் உலா வருகின்றனர்.
இது குறித்து அக்கிராம தலைவர் கூறுகையில், ‘இப்பகுதியில் சுமார் 2,000 குரங்குகள் உள்ளன. அவை மக்களுக்கு பல்வேறு இடையூறு களை ஏற்படுத்துகின்றன. 

குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து சேட்டைகள் செய்து அவர்களை தாக்குகின்றன. இதுவரை 150 முறைக்கும் மேல் அவைகளால் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.


இது குறித்து வனத்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே பொது மக்களிடம் பணம் வசூலித்து, நாடக கலைஞர்க ளிடமிருந்து மூன்று கரடி உடைகள் வாங்கி யுள்ளோம். 
இருவர் இந்த கரடி உடைகளை அணிந்து ரோந்து வருகின்றனர். இந்த யோசனை சற்று பயனுள்ள தாகவே உள்ளது’ என தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings