டிக்டாக் சிறுவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய காவல்துறை !

தூத்துக்குடி யில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின் முன்பாக டிக் டாக் வீடியோ பதிவிட்டதற்கு மாநகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ் இப்படி யான தண்டனையை கொடுத்துள்ளார்.
சிறுவர்களுக்கு நூதன தண்டனை


கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு ரவுடி தோரணை யில் விஜய் பாட்டுக்கு டிக்டாக் வீடியோ எடுத்தனர். 

டிக்டாக் வெளியிட்டதன் விளைவாக, அந்த இளைஞர் களை கண்டுபிடித்த காவல்துறை நூதனமான முறையில் தண்டனை வழங்கி யுள்ளது.

அதாவது, போக்குவரத் துறை சீரமைக்கும் காவலர்களுடன் இணைந்து, நகரில் மிகவும் நெரிசலான உள்ள இடங்களில் போக்குவரத்து சீரமைக்கும் பணியை செய்யச் சொல்லி தண்டனை வழங்கி யுள்ளார் டிஎஸ்பி.

இது குறித்து அவர் கூறுகையில் 'காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என இவர்களுக்கு தெறிய வேண்டும் என்பதற் காக 


இந்த மூன்று பேரையும் பெரிய மார்க்கட் சிக்னலில் எட்டு மணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணி செய்து காவல்துறையை பெறுமை படுத்த வேண்டும் என்ற நோக்கில் 

இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுத்து, இனி இது போல குற்ற நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி யுள்ளோம் என்று கூறினார்.

இந்த செய்தி இன்று இணையத்தில் பரவியதை அடுத்த போலீசாரின் அணுகு முறையையும், வரம்பு மீறிய சிறுவர் களுக்கு அவர்கள் அளித்த உழைப்பு சார்ந்த தண்டனை யையும் குறித்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings