சிறார் ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களை களை யெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபடத் தொடங்கினர்.
இணையத்தில் சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது மிகப்பெரிய குற்றம் என்றும்,
அவ்வாறு செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
அவ்வாறு செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
அதன்படி தங்கள் வேட்டையை தீவிரமாக செயல்படுத்தி கொண்டிருக் கின்றனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி பொத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (25).
இவர் தனது பேஸ்புக்கில் சிறார்களின் ஆபாச வீடியோவை பதிவிட்டு வந்தது கண்டறியப் பட்டது. இது தொடர்பாக சமூக ஊடகப் பிரிவில் இருந்து புகார் வந்தது.
அதன் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்ய மூர்த்தியை கைது செய்தனர். இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது சகோதரர் தேனி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி கொண்டிருக் கிறார். சிறார்
ஆபாச படங்களில் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்த புகார் தொடர்பாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரெண்டா பாசுமடாரி என்பவர் ஏற்கனவே கைது செய்யப் பட்டார்.
இவர் தற்போது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர்களது சமூக வலைத்தள கணக்குகளை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் முடக்கி யுள்ளனர்.
இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித் துள்ளனர்.
அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்து க்குள் கொண்டு வரப்படுவர் என்று கோவை எஸ்.பி. சுஜித்குமார் கூறியுள்ளார்.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments