நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - கட்டாயம் !

0
நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையான நாளை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
நாளை போலியோ சொட்டு மருந்து


இளம் பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப் படுவது போலியோ சொட்டு மருந்து.

5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.

1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்பட வில்லை. 

ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப் படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது. 

அதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத் துறை திட்ட மிட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

சென்னையை பொறுத்தளவில், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.03 லட்சம் குழந்தை களுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப் படுகிறதாம். 


இந்த பணிகளுக் காக, 1,645 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது.
அப்பெண்டிக்ஸ் நோயின் அறிகுறியும் அதன் சிகிச்சை முறையும் !
ஒரு வேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட முடியா விட்டால், 

அடுத்தடுத்த நாட்களில், வீடுகளுக்கே களப் பணியாளர்கள் நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர் களுக்கு அதிகாரிகள் மூலம், அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings